தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 12.43 லட்சம் பேருக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் (SIR) நடவடிக்கைகளின் போது மொத்தம் 97,37,832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணி வரும் ஜனவரி 18ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 12.43 லட்சம் பேருக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 2.37 லட்சம் பேருக்கும், திருவள்ளூரில் 1.85 லட்சம் பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
எஸ்ஐஆர் படிவத்தில் 2002–2005 ஆம் ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட வாக்காளர் அல்லது அவர்களின் உறவினர்களின் பெயர் குறித்த விவரங்களை வழங்காத வாக்காளர்களுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸ் பெற்றவர்கள், தேர்தல் ஆணையம் அங்கீகரித்த 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றுடன், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலரை தொடர்பு கொண்டு, வாக்குச்சாவடி அதிகாரியிடம் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.








