Home உலகம் இந்தியர்களின் அமெரிக்கா கனவிற்கு வந்த சோதனை!

இந்தியர்களின் அமெரிக்கா கனவிற்கு வந்த சோதனை!

அமெரிக்காவில செட்டில் ஆகணும். அங்கேயே வேலை வேண்டும் என்பது பல இந்தியர்களோட வாழ்நாள் கனவாவே இருக்கு. அந்த கனவோட ததிரவு கோள்தான் கிரீன் கார்ட். ஆனா இப்போ அந்த கனவுல ஒரு பெரிய இடி விழுந்திருக்கு.

குறிப்பா திருமணம் மூலமா கிரீன் கார்ட் பெற முயற்சிப்பவர்களுக்கு அமெரிக்கா ஒரு பெரிய செக் வச்சிருக்குனே சொல்லலாம். ஆமாங்க திருமணமான தம்பதிகளுக்கு கிரீன் கார்ட் வழங்குவதற்காக விதிகளை அமெரிக்கா ரொம்பவே கடுமையாக்கி உள்ளது.

போலி திருமணங்கள் மூலம் கிரீன் கார்ட் பெறுவதை தடுக்க புதிய அதிரடியான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டு இருக்கு அமெரிக்கா.

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினரில் இந்தியர்கள்தான் ரொம்பவே அதிகம். அப்படியானா இந்த புதிய விதிகள் இந்தியர்களை எப்படி பாதிக்கும்? என்னென்ன மாற்றங்கள் வந்துள்ளன? இனி கிரீன் கார்ட் வாங்குவது அவ்வளவு சுலபமா இருக்காதா? முதல்ல கிரீன் கார்ட் அப்படின்னா என்னன்னு தெரிஞ்சுக்கலாம்.

கிரீன் கார்ட் அப்படிங்கிறது அமெரிக்காவில் நிரந்தரமா வாழவும், வேலை செய்யவும் வழங்கப்படும் ஒரு உரிமை அட்டை. இந்த அட்டை கையில இருந்துச்சுன்னா, நீங்க ஒரு அமெரிக்க குடிமகனுக்கு இணையான பல உரிமைகளை பெறுவீங்க.

அதனால்தான் இதற்கு இவ்வளவு போட்டி இருக்கு. இப்போ அமெரிக்காவில் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம்? அமெரிக்க குடியுரிமை பலர் போலியான திருமணங்களை ஒரு கருவியா பயன்படுத்தி சட்ட விரோதமான கிரீன் கார்ட் வாங்குகிறார்கள்.

இது உண்மையான தம்பதிகளுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பையும் பறிக்குது இந்த மோசடியை ஒழிச்சு உண்மையான உறவுகளுக்கு மட்டும் கிரீன் கார்ட் வழங்குவது எங்களோட நோக்கம் அப்படின்னு அமெரிக்க தரப்பில சொல்லப்படுது.

இந்த புதிய கடுமையான விதிகள் ஆகஸ்ட் 1-ஆம் தேதியிலிருந்தே அமிலுக்கு வந்துவிட்டது. இனி புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கும் சரி, ஏற்கனவே விண்ணப்பித்து விட்டு காத்திருப்பவர்களுக்கும் சரி. இந்த விதி பொருந்தும். அப்படின்னு அமெரிக்க தரப்பில இருந்தும் சொல்லப்படுது.

முதலாவது மிக கடுமையான ஆவண சரிபார்ப்பு. முன்பு போல வெறும் திருமண சான்றுதலை மட்டும் காட்டுனா போதாது. இனி நீங்க உண்மையான தம்பதிதான் அப்படிங்கிறத நிரூபிக்க மிகவும் உறுதியான ஆதாரங்களையும் கொடுக்கணும்.

நீங்க இருவரும் சேர்ந்து எடுத்துக்கிட்ட பல புகைப்படங்கள் இருவரோட பெயரிலும் இருக்கும் வங்கி கணக்குகள், சொத்து பத்திரங்கள் போன்ற நிதி ஆதாரங்கள் உங்கள் இருவரையும் நன்கு அறிந்த நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் வழங்கும் பிரமாண பத்திரங்கள் என பல ஆவணங்களை கேட்டக போறாங்க.

இரண்டாவது கட்டாய நேர்காணல். இனி திருமணம் மூலம் கிரீன் கார்ட் விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தம்பதியும் கட்டாயமா தனித்தனி நேர்காணலுக்கு செல்ல வேண்டும். அந்த நேர்காணலில் உங்கள் உறவின் நம்பகத்தன்மையை சோதிக்கும் வகையில குறுக்கு கேள்விகளும் கேட்கப்படும்.

நீங்கள் சொல்ற பதில்ல சின்னதா முரண்பாடு இருந்தாலும் உங்க விண்ணப்பம் நிராகரிக்கப்பட அதிக வாய்ப்பு இருக்குன்னே சொல்லலாம். மூன்றாவது குடியேற்ற வரலாற்றை முழுமையாக தோண்டுவது.

குறிப்பா ஸ்டுடென்ட் விசா, வேலைக்கான விசா என வேறு விசாக்களில் அமெரிக்காவுக்கு சென்று பின்னர் அங்கு ஒரு அமெரிக்கரை திருமணம் செய்து கிரீன் கார்ட் விண்ணப்பிப்பவர்களின் பின்னணியை மிக ஆழமாக தோண்டி துறவி ஆய்வு செய்ய போகிறார்கள். இந்த விதிகள் இந்தியர்களை எப்படி பாதிக்கும்?

ஒரு அமெரிக்க குடிமகன் இந்தியாவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து அவருக்கு கிரீன் கார்டுக்கு ஸ்பான்சர் செய்தால் அந்த தம்பதியினர் இப்போது தங்கள் உறவு உண்மையானதுதான் என்பதை நிரூபிக்க ஒரு பெரிய போராட்டத்தையே நடத்த வேண்டி இருக்கும்.

இந்தியாவில் நடக்கிற பாரம்பரிய திருமணங்கள் அமெரிக்க அதிகாரிகளுக்கு புரியாம கூட போகலாம். அதனால கூடுதல் ஆவணங்களை கேட்டு வேண்டுமென்றே இழுத்தடிக்க வாய்ப்பு இருக்கதா சொல்லப்படுது.

ஆக அமெரிக்கா தனது கதவுகளை மெல்ல மெல்ல இருக்க தொடங்கி உள்ளது. போலி திருமணங்களை தடுப்பது என்ற பெயர்ல உண்மையான தம்பதிகளுக்கு இனி ஒரு அக்னி பரீட்சையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

இந்த கடுமையான விதிகள் அமெரிக்காவின் குடியேற்ற அமைப்பை சுத்தப்படுத்தும் ஒரு நல்ல நடவடிக்கையா? அல்லது இது வெளிநாட்டினரை குறிப்பாக இந்தியர்களை குறிவைக்கும் ஒரு மறைமுக தடையா? இப்போ கேள்வி இதுதான்.

அமெரிக்காவின் இந்த கடுமையான விதிகள் சட்ட விரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்துமா? அல்லது உண்மையான காதலுக்கும் திருமணத்திற்கும் தடையாக அமையுமா?