நாசாவில் பணி புரிய சீனர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகம் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனாவும் ரஷ்யாவுடன் இணைந்து போட்டி போடுகிறது.
எனவே இந்த திட்டம் தொடர்பான ரகசியங்கள் தெரிந்து விடாமல் இருப்பதற்காக நாசாவில் பணி புரிய சீனர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விசா வைத்திருந்தாலும் சீனராக இருந்தால் அவர்களுக்கும் இந்த தடை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் ஆராய்ச்சி மாணவராக தொடரலாம் என நாசா தெரிவித்துள்ளது. நாசாவில் பணி புரிவதற்கான தங்களது உரிமையை பறிக்கும் செயல் என சீனா
குற்றம் சாட்டி உள்ளது.








