Home உலகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறை விடுவிக்கப்பட்ட கலிதா ஜியா இன்று காலமானார்

17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறை விடுவிக்கப்பட்ட கலிதா ஜியா இன்று காலமானார்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹஸினாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் 1975ஆம் ஆண்டு ராணுவ சதியால் கொலை செய்யப்பட்டார். அந்த சமயம் அவரது குடும்ப உறுப்பினர்களில் பலரும் கொல்லப்பட்டனர். வங்கதேசம் பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற்ற நான்காம் ஆண்டுகளில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

ஷேக் முஜிபுர் ரஹ்மான் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஜியாவுர் ரஹ்மான் ஆட்சியைப் பிடித்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு ஜியாவுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, அவரது மனைவி கலிதா ஜியா அரசியலில் கால் வைத்தார்.

1990ஆம் ஆண்டில், ராணுவ தளபதி எர்ஷாத்தின் ஆட்சிக்கு எதிராக ஷேக் ஹஸீனா நடத்திய போராட்டத்தில் கலிதா ஜியாவும் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்ததும், அங்கு நடைபெற்ற பொது தேர்தலில் வெற்றி பெற்று, கலிதா ஜியா வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.

கலிதா ஜியா தனது முதல் பதவியை 1991 முதல் 1996 மார்ச் வரை வகித்தார். பின்னர் 2001 முதல் 2006 அக்டோபர் வரை இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்று பிரதமராக இருந்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டில், ஷேக் ஹஸீனா ஆட்சிக் காலத்தில், ஊழல் வழக்கில் கலிதா ஜியாவுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்த அவருக்கு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது.

2024ஆம் ஆண்டில், வங்கதேச அதிபர் ஷேக் ஹஸீனா ஆட்சியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் பின்னர் கலிதா ஜியாவை சிறையிலிருந்து விடுவிக்க உத்தரவிட்டது. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

17 ஆண்டுகளுக்குப் பிறகு, கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் சமீபத்தில் லண்டனிலிருந்து வங்கதேசம் திரும்பினார். விமான நிலையத்தில் வரவழைந்த அவர் நேரடியாக தனது தாய் கலிதா ஜியாவை எவர்கேர் மருத்துவமனையில் சந்தித்து உடல்நிலை பற்றி விசாரித்தார். பிறகு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த கலிதா ஜியா, உடல்நல குறைவால் இன்று காலமானார்.

இந்த செய்தி வங்கதேசம் முழுவதும் பரவிய நிலையில், அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மருத்துவமனை முன்பு திரண்டுள்ளனர். இதற்கிடையில், நேற்று கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.