சீனாவில் நோரோ வைரஸ் தொற்றால் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் போஷா நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவர்களில் 100க்கும் மேற்பட்டோருக்கு நோரோ வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சுகாதார கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பாதிப்புக்குள்ளான மாணவர்கள் தற்போது நலமுடன் இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும் உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.








