பெர்ப்ளக்ஸ் கிட்ட ஒரு விஷயத்தை பத்தி ரிசர்ச் பண்ண சொல்றீங்களா? ஆமா நம்ம எல்லாருமே இப்போ ஏஐய(AI) நம்மளுடைய ஒரு பர்சனல் அசிஸ்டன்ட் மாதிரிதான் யூஸ் பண்றோம்.
ஆனா ஒரு நிமிஷம் இந்த ஏஐ(AI) கிட்ட பேசுறது நம்ம நண்பர்கிட்ட மாதிரி பாதுகாப்பானதா. நீங்க டைப் பண்ற ஒவ்வொரு வார்த்தையும் எங்க போகுதுன்னு என்னைக்காவது யோசிச்சிருக்கீங்களா? உண்மை என்னன்னா நீங்க (AI) கிட்ட பேசுற ஒவ்வொரு உரையாடலும் ரெக்கார்ட் செய்யப்படுது சேமிக்கப்படுது.
அப்புறம் அந்த ஏஐ(AI)க்கு பயிற்சி கொடுக்கறதுக்காக பயன்படுத்தப்படுகிறது. சுருக்கமா சொன்னா இது ஒரு பப்ளிக் டைரில எழுதுற மாதிரி. அதனால சில விஷயங்களை நீங்க ஒருபோதும் இந்த AI சாப்ட்வேர் கிட்ட சொல்லவே கூடாது.
அது என்னென்ன 10 விஷயங்களை பார்க்கலாம்.
முதல் :
உங்க தனிப்பட்ட தகவல்கள். உங்க முழு பெயர், வீட்டு முகவரி, போன் நம்பர், இமெயில் ஐடி இதையெல்லாம் சொல்றது சாதாரண விஷயம்னு நினைக்கலாம்.
ஆனா இந்த சின்ன சின்ன தகவல்களை வச்சே உங்க ஆன்லைன் அடையாளத்தை ஹேக்கர்ஸ் கண்டுபிடிச்சிட முடியும். மோசடி அழைப்புகள், ஃபிஷிங் தாக்குதல்கள்ன்னு பெரிய ஆபத்துல கொண்டு போய்விடும்.
இரண்டாவது :
பணம் சம்பந்தப்பட்ட விவரங்கள். இது ரொம்பவே முக்கியம். உங்க பேங்க் அக்கவுண்ட் நம்பர், கிரெடிட் கார்டு நம்பர், சிபிவிஏ உங்க சமூக பாதுகாப்பு எண் எதையுமே ஏஐ (AI) கிட்ட டைப் பண்ணாதீங்க. ஒருவேளை அந்த சிஸ்டம் ஹேக் செய்யப்பட்டா உங்க பேங்க் அக்கவுண்ட் காலியாகிடலாம்.
மூன்றாவது :
பாஸ்வேர்ட்கள். எனக்கு ஒரு ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட் சொல்லுன்னு கேடறது கூட தப்புதான். உங்களுடைய எந்த பாஸ்வேர்டையும் ஏஐ AI கிட்ட சொல்லாதீங்க. உங்க இமெயில் சோசியல் மீடியான்னு எல்லா அக்கவுண்ட்டும் ஹேக் செய்யப்பட வாய்ப்பு இருக்கு.
நான்காவது :
ரகசியங்கள் மற்றும் ஒப்புதல் வாக்கு மூலங்கள். நம்மல பலரும் ராத்திரி நேரத்துல ஏஐய (AI) ஒரு தெரபிஸ்ட் மாதிரி யூஸ் பண்றோம்.
நம்ம மனசுல இருக்கற ரகசியங்களை எல்லாம் கூறுகிறோம். ஆனா ஒன்னு தெரிஞ்சுக்கோங்க ஏஐ(AI) க்கு ரகசியம் காக்க தெரியாது. நீங்க சொல்ற விஷயங்கள் ரெக்கார்ட் செய்யப்பட்டு நாளைக்கு அதுவே உங்களுக்கு பிரச்சனையா வரலாம்.
ஐந்தாவது:
மருத்துவ தகவல்கள். உங்க மெடிக்கல் ரிப்போர்ட்ட போட்டோ எடுத்து இதுக்கு என்ன அர்த்தம்னு சொல்லு அப்படின்னு கேக்குறீங்களா தயவு செஞ்சு அதை செய்யாதீங்க. ஏஐ(AI) ஒரு டாக்டர் கிடையாது. அது தவறான ஆலோசனையை கொடுக்கலாம். அதுமட்டுமில்லாமல் உங்களுடைய தனிப்பட்ட மருத்துவ தகவல்கள் கசியவும் வாய்ப்பு இருக்கு.
ஆறாவது :
தகாத அல்லது சட்ட விரோத விஷயங்கள். ஆபாசமான விஷயங்கள், சட்டத்துக்கு புறமான கருத்துக்கள், வன்முறையான பேச்சுக்கள் இதையெல்லாம் ஏஐ(AI) கிட்ட பேசாதீங்க. உங்க அக்கவுண்ட் முடக்கப்படலாம். அது மட்டுமில்லாமல் நீங்க பேசுனது எல்லாமே அவங்க சர்வர்ல பதிவாகி இருக்கும்.
ஏழாவது :
வேலை சம்பந்தமான ரகசியங்கள். உங்க கம்பெனியோட ஒரு ரகசிய ரிப்போர்ட்ட காப்பி பேஸ்ட் பண்ணி இதை சுருக்கி தானே கேக்குறீங்களா? ரொம்ப ரொம்ப பெரிய தப்பு. கம்பெனி ரகசியங்கள் கசிஞ்சா உங்க வேலையே போகலாம்.
எட்டாவது:
சட்ட சிக்கல்கள். ஒரு ஒப்பந்தம் ஒரு கேஸ் பத்தின விவரங்களை சொல்லி இதுக்கு என்ன பண்ணலாம்னு ஏஐ(AI) கிட்ட கேட்காதீங்க. ஏஐ (AI)ஒரு வக்கீல் கிடையாது. தவறான ஆலோசனையை உங்க சட்டப்பூர்வமான நிலையை இன்னும் மோசமாக்கிடலாம்.
ஒன்பதாவது :
முக்கியமான போட்டோக்கள் மற்றும் ஆவணங்கள். உங்க பாஸ்போர்ட், ஆதார் கார்டு, டிரைவிங் லைசன்ஸ் போட்டோவையோ இல்ல உங்க தனிப்பட்ட போட்டோக்களையோ ஒருபோதும் ஏஐ(AI) அப்லோட் பண்ணாதீங்க. நீங்க டெலீட் பண்ணாலும் அதோட டிஜிட்டல் தனம் எங்கேயாவது இருந்துகிட்டே இருக்கும்.
பத்தாவது :
தங்க விதி அதாவது கோல்டன் ரூல். எந்த ஒரு விஷயத்தை நீங்க ஒரு பப்ளிக் நோட்டீஸ் போர்டுல ஒட்ட மாட்டீங்களோ அதை ஏஐ (AI)கிட்ட சொல்லாதீங்க. சிம்பிள் ஏஐ(AI) ஒரு அற்புதமான ஒரு கருவி அதுல சந்தேகமே கிடையாது. ஆனா அதை எப்படி பாதுகாப்பா பயன்படுத்துறதுன்னு தான் நம்ம தெரிஞ்சுக்கணும். உங்க டேட்டாவோட பாதுகாப்பு உங்க கையிலதான் இருக்கு.








