Home உலகம் “ஸ்டெர்லைட் உரிமையாளரின் மகன் திடீர் மரணம்”

“ஸ்டெர்லைட் உரிமையாளரின் மகன் திடீர் மரணம்”

ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட பல தொழில் நிறுவனங்களை கொண்டுள்ள வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலின் மகன், விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில்,அவர் கடுமையாக காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த துயரச் செய்தியை அனில் அகர்வால் தனது சமூக ஊடகப் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். மகனை இழந்த வேதனையை அவர் உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

இந்த சம்பவம் தொழில்துறையிலும், பொதுமக்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.