பூமியின் காலநிலை மாற்றத்திற்கு வளிமண்டல கார்பன் டைஆக்சைடு மட்டுமே காரணம் என்று கருதப்பட்ட நிலையில், கண்டத்தட்டுக்களின் நகர்வே இதற்குப் பின்னால் உள்ள உண்மையான உந்துசக்தி என்பதை சிட்னி மற்றும் மெல்பர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பூமி எப்போது வெப்பமடையும், எப்போது பனிப்பொழிவால் உரையும் என்பதை தீர்மானிப்பதில் கண்டத்தட்டுகளின் நகர்வு முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த 54 கோடி ஆண்டுகால தரவுகளை கணினி மாதிரிகள் மூலம் ஆய்வு செய்ததில் பல வியக்கத்தக்க உண்மைகள் தெரிய வந்துள்ளன.
வழக்கமாக எரிமலைகளே அதிக கார்பனை வெளியிடுவதாகக் கருதப்பட்டால், ஆய்வின் படி கண்டத்தட்டுகளும் அதிகப்படியான கார்பனை வெளியேற்றுகின்றன என்பது தெளிவாக கண்டறியப்பட்டுள்ளது.
20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பிளாங்கடிக் கால்சிபையர்ஸ் எனும் நுண்ணுயுரிகள், வளிமண்டல கார்பனை ஈர்த்து கடலடியில் நூற்றுக்கணக்கான மீட்டர் ஆழத்துக்கு படிமங்களாக சேமிக்கின்றன.
கடந்த 12 கோடி ஆண்டுகளில் கண்டத்தட்டுகள் மோதிக்கொள்ளும்போது, இந்த படிமங்கள் எரிமலைகள் வழியாக மீண்டும் வளிமண்டலத்துக்குத் திரும்பியிருக்கலாம். இதுவே ஆள் கார்பன் சுழற்சி என அழைக்கப்படுகிறது.
இந்த ஆய்வு எதிர்கால காலநிலை மாற்றத்தை கணிக்கவும், மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பாதிப்புகளை புரிந்து கொள்ளவும் மிக முக்கியமான தரவாக அமையும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.








