காப்பீட்டுப் பிரீமியங்களுக்கு ஜிஎஸ்டி ரத்து செய்க.. நிர்மலா சீதாராமனுக்கு நிதின் கட்கரி கடிதம்
மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமியங்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) திரும்பப் பெறக் கோரி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக வெளியான செய்தி அறிக்கையில், காப்பீட்டிற்கான பிறீமியங்கள் மீதான ஜிஎஸ்டி என்பது வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளுக்கு வரி விதிப்பதாகவும், துறையின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதாகவும் இருப்பதாக நிதின் கட்கரி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது.
ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்களுக்கு தற்போது 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மூத்த குடிமக்களுக்கு சிரமமாக இருப்பதால், ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டியை திரும்பப் பெறுவதற்கான ஆலோசனையை முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்குமாறும் நிதின் கட்கரி தனது கடிதத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
வாழ்க்கைக் காப்பீட்டின் மூலம் சேமிப்பை வேறுபடுத்துதல், உடல்நலக் காப்பீட்டு பிரீமியங்களுக்கான வருமான வரி விலக்கை மீண்டும் அறிமுகப்படுத்துதல் மற்றும் பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனங்களை ஒருங்கிணைப்பது ஆகியவற்றையும் நிதின் கட்கரி தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.