சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த வழக்கில் அமலாக்க இயக்குநரகம் அளித்த நோட்டீஸ் வைத்து ஐதாராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்த விசாரணையில் டோலிவுட் இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா நேரில் ஆஜரானார்.
இந்த வழக்கில் விஜய் தேவரகொண்டாவிடம் அதிகாரிகள் பல கேள்விகளைக் கேட்டதாக கூறப்படுகிறது.அவரது வாக்குமூலத்தை அதிகாரிகள் பதிவு செய்தனர்.
கடந்த வாரம் பந்தய செயலி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடிகர் பிரகாஷ் ராஜிடமும் விசாரித்தனர். அப்போது பந்தய செயலிகளை மீண்டும் விளம்பரப்படுத்த மாட்டேன் என்று பிரகாஷ் ராஜ் அதிகாரிகளுக்கு உறுதியளித்தார்.
மறுபுறம், டோலிவுட் நடிகர் டக்குபதி ராணாவையும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் .
மேலும் சில நடிகர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்களில் மஞ்சு லட்சுமி பிரசன்னாவும் ஒருவர். ஆகஸ்ட் 13 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
பந்தய செயலிகளை விளம்பரப்படுத்துவதன் மூலம் விஜய் தேவரகொண்டா பணமோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது
எனவே பந்தய செயலிகளிலிருந்து பெறப்பட்ட தொகையை அதிகாரிகள் முழுமையாக விசாரித்து வருகின்றனர். டோலிவுட் நடிகர்கள் ஏன் சட்டவிரோத செயலிகளை விளம்பரப்படுத்த வேண்டியிருந்தது..? என்ற கோணத்திலும் அதிகாரிகள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.








