ஆமீர் கானின் டங்கல் இந்தியா மட்டுமின்றி உலகளவில் மெகா ஹிட்டான படம். இதில் இளமைக் கால கீதா போகட் கதாபாத்திரத்தில் ஜைரா வாசிம் நடித்தார். இந்த படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்றவர் ஜைரா வாசிம்.
மல்யுத்த வீராங்கனையாக தோன்றுவதற்காக தனது தலைமுடியை வெட்டிக்கொண்டார். சுமார் ஆறு மாதங்களுக்கு மேல் மல்யுத்தம், நீச்சல் மற்றும் உடற்பயிற்சி போன்ற கடுமையான உடல் ரீதியான பயிற்சிகளை மேற்கொண்டு இப்படத்தில் நடித்தார்.
டங்கல் படம் உலக அளவில் 2070 கோடி ரூபாய் வசூலித்தது. 2017ல் வெளியான சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படம் 969 கோடியும், தி ஸ்கை இஸ் பிங்க் என்ற மற்றொரு படம் 28 கோடியும் வசூலித்தது. மொத்தமாக இவர் நடித்த மூன்று படங்கள் 3000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளன.
தற்போது ஜைரா வாசிம் சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தேசிய விருதுகளை வென்ற ஜைரா, தனக்கு பெயரும் புகழும் வேண்டாம் என ஓய்வை அறிவித்துள்ளார்.








