திருப்பூரில் சிறப்பு உதவி ஆய்வாளரை வெட்டிக்கொன்ற சம்பவத்தில் மணிகண்டன் என்பவர் என்கவுண்டரில் உயிரிழந்திருக்கிறார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே எஸ்.எஸ்..ஐ வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவர் மூன்றாவது குற்றவாழியான மணிகண்டன் தற்போது போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள சித்தனூண்டு தோட்டத்து பகுதியில் வசித்து வரும் நபர்கள் இடையே குடிபோதையில் தகராறு செய்து வருவதாக குடிமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் அடிப்படையில் குடிமங்கலம் சிறப்பு எஸ்.எஸ்.ஐ சண்முகவேல் மற்றும் ஆயுதப்படைக்காவாளர் அழகுராஜ் ஆயர் சம்ப இடத்துக்கு சென்று நேற்று விசாரணை செய்ய முற்பட்டபோது அங்கிருந்தவர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து அந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூர்த்தி தங்கப்பாண்டி மணிகண்டன் ஆகிய மூன்று பேரையும் போலீசார் ஆறு தனிப்படை அமைத்து திருப்பூர் மாவட்ட எஸ்.பி கிரீஸ் யாதவ் தலைமையில் மிகவும் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை மூர்த்தி அவரது மகன் தங்கபாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்த நிலையில் அவர் மூன்றாவது குற்றவாளியான மணிகண்டனை போலீசார் தீவிரமாக தேடுதல் வேடையில் ஈடுபட்டுருந்தனர் இநிலையில் நேற்று இரவு பிடிபட்ட மணிகண்டனை போலீசார் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக சித்தலூத்து தோட்டத்து பகுதிக்கு இன்று அதிகாலை மீண்டும் அழைத்து சென்றதாக தெரிகிறது.
அப்போது சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டிருந்த போது குடிமங்கலம் எஸ்.ஐ சரவணமூர்த்தி என்பவரை மணிகண்டன் அறுவாலால் மீண்டும் தாக்க முற்பட்டதாக தெரிகிறது.இதனை தொடர்ந்து பாதுகாப்புக்காக எஸ்.ஐ . மணிகண்டனை என்கவுண்டர் செய்ததாக போலீசார் தரப்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பெரும் ஒரு அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சிறப்பு எஸ்.ஐ சண்முகவேல் கொலை வழக்கில் குற்றவாளிகள் என்கவுண்டர் செய்திருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து தற்போது மூர்த்தி மற்றும் தங்கபாண்டி ஆகியவரிடம் போலீசார் மிகுந்த தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறனர். இன் நிலையில் என்கவுண்டர் செய்யப்பட்ட மணிகண்டன் உடல் தற்போது உடுமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








