சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் குப்பைகள் அகற்றப்படாமல் ஆங்காங்கே தேங்கி இருக்கிறது. சென்னையில் தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக குப்பைகள் அகற்றப்படாமல் தேக்கம் அடைந்திருக்கிறது.
குறிப்பாக எழும்பூர், ராயபுரம், திருவிக்கா நகர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் தேங்கி இருக்கிறது. எவ்வளவு டன் குப்பைகள் தேங்கி இருக்கு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில ஈடுபட்டுட்டு இருக்காங்க .
சென்னை எழும்பூர் பகுதியில் இருக்கக்கூடிய வெங்கு தெரு பகுதியில் எவ்வளவு குப்பைகள் சாலையிலேயே தேங்கி கிடக்கிறது கொட்டி கிடக்கிறது ஏனென்றால் இந்த பகுதி வெங்கு தெருவை பொறுத்தவரையில் அருகே காவல்துறையுடைய பணியாற்றக்கூடிய குடியிருப்புகள் இருக்கின்றன.
பொதுமக்கள் அதிக அளவில் இந்த பகுதியில் வீடுகளில் வசித்து வருகிறார்கள் . இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த தெருக்கள் முழுவதுமே குப்பை கூலங்களாக கழிவுகளால் நிறைந்த ஒரு பகுதியாக மாறி இருக்கிறது. கடந்த ஒரு வாரமாக தூய்மை பணியாளர்கள் ஒருபுறம் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். சென்னை மாநகராட்சியில் மண்டலம் ஐந்து மற்றும் ஆறுக்கு உட்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக அவர்கள் அதை கண்டித்து தற்போது மாநகராட்சிக்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.
இந்த காத்திருப்பு போராட்டம் எட்டு நாட்களாக தொடர்ந்து வருகிறது. மாநகராட்சி தரப்பில் இந்த குப்பைகளை அகற்றுவதற்கு தனியாரிடம் இந்த ஒப்பந்தத்தை ஒப்படைத்திருக்கிறார்கள். இந்த இரண்டு மண்டலங்களுக்கும் உட்பட்ட இடங்களில் தூய்மைப்படுத்துவதற்காக அவர்கள் தனியாரிடம் ஒப்படைத்திருக்கக்கூடிய வேலையில் இந்த மாநகராட்சியில் பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் அவர்கள் சுமார் 2000 பேர் தற்போது போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னையில் இந்த இரண்டு மண்டலங்கள் ராயபுரம் மற்றும் திருவிக்கா நகர் மண்டலத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 10 முதல் 15 லட்சம் மக்கள் இந்த இரண்டு மண்டலங்களை வசிக்கிறார்கள்.
இந்த மக்களுக்கு ஒருவொரு நாளும் அவர்கள் வீடுகளில் இருந்தும் அதேபோன்று கடைகள், வணிக வளங்கள் என பல இடங்களில்ிருந்து வெளியேறக்கூடிய குப்பைகள் முறையாக இந்த ஒரு வாரமாக அகற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். இருந்தாலும் வேற இடத்தில் பணியாற்றக்கூடிய துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் அழைத்து வந்து இங்கு தூய்மைப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டாலும் அது பிரதான சாலைகளில் இருக்கக்கூடிய அந்த குப்பை தொட்டிகளில் இருந்து லாரிகள் மூலமாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் இது போன்ற உட்புறங்களில் இருக்கக்கூடிய குடியிருப்புகள் சார்ந்த பகுதியில் இருக்கும் இடங்களிலிருந்து வெளியேற்றக்கூடிய குப்பைகள் இன்னும் அகற்றப்படாமலே இருக்கின்றன.
இந்த ஒரு வார காலமாக முறையாக குப்பைகள் அகற்றப்படாததால் ஏராளமான குப்பைகள் டன் கணக்கில் அங்கங்கு குவிய்ந்து கிடக்கின்றன. ஒவ்வொரு மண்டலத்திலும் சுமார் 50 டன் முதல் 100 டன் கூட குப்பைகள் தேங்கி இருக்கலாம் என தெரிவிக்கிறார்கள்.








