நாளைக்கு பொதுக்குழு கூட்டி இருக்கிறார் அன்புமணி. அன்புமணி ராமதாஸ் தரப்பில் இருந்து எதிர்ப்பு வழக்கு கோர்ட்டுக்கு விசாரணைக்கு வந்திருக்கு. இன்றைக்கு ஜந்தரை மணிக்கு இருவரையும் வர சொல்லி இருக்கிறாங்க. அதுவும் ஓபன் கோர்ட்ல இல்லாம நீதிபதியினுடைய அறையில பேச அழைத்திருக்கிறார்கள்.
பாமக பொறுத்தவரையில டாக்டர் ராமதாஸ் ஐயா என்கிற ஒரு எளிய மனிதரால் துவங்கப்பட்ட ஒரு கட்சி அந்த கட்சிக்கு நிச்சயமாக அந்த கட்சியினுடைய நிறுவனம் சொல்லகிற வகையிலே அன்புமணி செயல்பட்டால் மட்டும்தான் அந்த கட்சிக்கு எதிகாலம் உண்டு.
இல்லாவிட்டால் நிச்சயமாக அதற்கு இந்த ஆபத்து நீங்காது ஏன்னா ராமதாஸ் ஐயாவை பற்றி நன்றாக தெரியும் அவர் தான் ஒரு முடிவை எடுத்துவிட்டால் முடிவில் இருந்து ஒரு காலும் மாற மாட்டார். உறுதியாக இருப்பார். எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்.
சொந்த மகன் திரு அன்புமணி என்பதும் இங்கு முக்கியமாக பார்க்க வேண்டிய ஒன்று. எனவே இதில் கொள்கையிலயோ, கோட்பாட்டிலையோ பிரச்சனை வரல. இரண்டு பேருக்கும் ஏற்படுகிறது கருத்து வேறுபாடு. எனவே இதை தீர்க்க முடியும் என்கிற நம்பிக்கை நீதிபதிக்கு இல்லன்னு சொன்னா இந்த வழக்கு உடனடியா முடியக்கூடியது அல்ல.
நாளை உடனே தீர்ப்பு கொடுத்து உடனடியா இதை தீர்வுக்கு கொண்டுவரலாம் எண்ணத்தோடு சொன்னானா சரியானதுதான் ஆனா மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்களை பொறுத்தவரையில் அவரிடத்தில் முழுக்க முழுக்க நியாயம் இருக்கிறது. எனவே அந்த நியாயத்தை அன்புமணி புரிந்து கொள்ள மறுக்கிறார்.
ஏன்னா அந்த கட்சியை உருவாக்கியவர் கட்சியை இவ்வளவு ஆண்டு காலம் நடத்தியவர் அதற்கான உயர்வுக்கா கஷ்டப்பட்டவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள். அவர் கட்சி தொடங்கி வளர்த்து உருவாக்கிய காலத்தில எந்த வசதி வாய்ப்பும் இல்லை ஆனால் திரு அன்புமணி அவர்கள் மிக லாபமாக மிக எளிமையாக அந்த பத்திரிகைக்கு வந்துட்டார்.
எனவே அப்பாவினுடைய அந்த கஷ்டம் புரியாமல் அந்த கட்சியை எப்படியாவது அடைய வேண்டும் என்கிற நோக்கத்தோடு அவர் செயல்படுகிறார். எனவே அதுதான் தவறா தெரியுது. இப்ப குறிப்பட்ட மாவட்ட செயலாளர்கள் , நிர்வாகிகள் தங்கள் பக்கம் இருக்காங்க ஒரே காரணத்துக்காக தந்தையை வீழ்த்துவதற்கு ஒரு தலைவன் முயல்வது மிகப்பெரிய ஆபத்தாக அந்த கட்சிக்கு அமையும்..
ஆனா எந்த சூழ்நிலையிலும் ராமதாஸ் அவர்கள் விட்டு தர மாட்டேன் நான் ஆரம்பமே சொல்லிட்டு வரேன். அதை அன்புமணி புரிந்து கொள்ளாவிட்டால் நஷ்டம் அன்புமணிக்குதான் பார்க்கலாம் இன்றைக்கு ஐந்தரை மணிக்கு நீதிபதி வரச் சொல்லி பணிந்திருக்கிறார் என்ன நடக்கிறது என்பதை நம்ம பொறுத்திருந்தே பார்க்கலாம் .








