Home திரையுலகம் பிரபல நடிகருக்கு கொலை மிரட்டலா!

பிரபல நடிகருக்கு கொலை மிரட்டலா!

நடிகரும், மக்கள் நீதி மைய தலைவருமான கமல்ஹாசனுக்கு, கொலை மிரட்டல் விடுத்ததாக துணை நடிகர் ரவி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவராக இருப்பவர் கமலஹாசன். இவர் பிரபல நடிகராக இருந்து தற்போது எம்பியாக இருக்கிறார்.

சென்னையில் நடந்த ஒரு விழாவில் சனாதானம் பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்ததாகவும் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் துணை நடிகராக இருக்கக்கூடிய ரவி என்பவர் ஒரு தனியார் YouTube சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்திருக்கிறார் .

அதில் கமலஹாசன் அவர்களை மிரட்டும் வகையிலும் அவரது கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசி இருப்பதாகவும் கூறப்படுகிறது குறிப்பாக சங்கை அறுப்போம் என்று கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார் .

இது குறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக தற்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டிருக்கிறது சனாதனம் பற்றிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் .

கமலஹாசன் பேசுவதற்கு துணை நடிகர் ரவி என்பவர், கொலைமிரட்டல் விடுதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று காவலாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் துணைத்தலைவராக இருக்கக்கூடிய மௌரியா மற்றும் நிர்வாகிகள் சினேகன் ,முரளி ,அப்பாஸ் மயில்வாகனன், அர்ஜுன் ஆகியோர் சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.

கமலஹாசனுக்கு மிரட்டல் விடுத்த நடிகர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவரை கைது செய்ய வேண்டும் என்ற கூறி இந்த புகார் மனுவானது அளிக்கப்பட்டிருக்கிறது.