Home இந்தியா ” திகில் “ ராக்கி கட்டிய சில நிமிடங்களில் தங்கையின் உயிர் பலி:

” திகில் “ ராக்கி கட்டிய சில நிமிடங்களில் தங்கையின் உயிர் பலி:

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தை சேர்ந்தவர் 19 வயது இளைஞர் விஷால். இவர் அதே பகுதியில் வசிக்கும் வேறு சமூகத்தை சேர்ந்த புட்டோ என்ற 18 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகினர். பெண் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் இருவரையும் கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

இருவரும் தங்களது பெற்றோரின் வீட்டிற்கே செல்வதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில் போலீசார் இருவரையும் பெற்றோரடு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து விஷாலின் தந்தை விஷாலை குஜராத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தாலும் விஷாலும் அவரது காதலியும் போனில் அடிக்கடி பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தனது தங்கை புட்டோ வேறு சமூகத்தை சேர்ந்த நபரை காதலித்து வீட்டை விட்டு வெளியேறியதால் அவரது சகோதரன் அரவிந்த் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் தனது தங்கை விஷாலோடு போனில் பேசுவதை அறிந்த சகோதரன் அரவிந்த் கொந்தளித்துள்ளார். போனில் விஷாலிடம் பேசிய அரவிந்த் இனி எனது தங்கையோடு பழகுவதை நிறுத்திக்கொள் என எச்சரித்துள்ளார்.

அதற்கு உனது தங்கையை நான்தான் திருமணம் செய்து கொள்ள போகிறேன் என விஷால் சவால் விட்டுள்ளார். இதனால் அரவிந்த் மேலும் ஆத்திரம்அடைந்துள்ளார்.

அண்மையில் ரக்க்ஷாபந்தன் கொண்டாட ஊருக்கு சென்ற அரவிந்த் தங்கையின் காதலனான விஷாலருக்கு போன் செய்து உங்கள் திருமணத்தை நான் நடத்தி வைக்கிறேன் அதற்கு முதலில் உனக்கு ஒரு நல்ல வேலை வேண்டும்.

அதனால் நீ கிளம்பி வா உனக்கு ஒரு நல்ல வேலை வாங்கி தருகிறேன் என்று ஊருக்கு ஒதுக்குப்புறமாக வரவழைத்துள்ளார்.

அங்கு விஷால் வந்ததும் அரவிந்தும் அவரது நண்பரான பிரகாஷ் என்பவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஷாலை குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இது எதுவும் விஷாலின் காதலிக்கு தெரியவில்லை.

பின்னர் இரண்டு நாட்களுக்கு பின் ரக்க்ஷாபந்தன் அன்று புட்டோ தனது அண்ணன் அரவிந்தருக்கு கையில் ராக்கி கட்டி விட்டுள்ளார். ராக்கி கட்டிய சில நிமிடங்களுக்கு பிறகு அரவிந்த் கடைக்கு செல்லலாம் என கூறி தனது தங்கையை வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு அரவிந்தும் அவரது நண்பருமான பிரகாஷும் சேர்ந்து புட்டோவின் கழுத்தை ஆத்திரம் அடங்கும் வரை நெறித்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் அரவிந்தின் தந்தை தனது மகனும் நண்பர்களும் சேர்ந்து மகளை கொன்று விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் அரவிந்தையும் அவரது நண்பரான பிரகாஷையும் கைது செய்து விசாரித்தபோது தான் தங்கையை மட்டுமல்ல இரண்டு நாட்களுக்கு முன்பு தங்கையின் காதலனையும் கொலை செய்திருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது.

இதற்காக அரவிந்த் ஒன்றரை மாதமாக திட்டம் தீட்டியதும் தெரிய வந்தது. போலீசார் கொலை செய்யப்பட்ட இருவரின் உடலையும் கைப்பற்றி கைதான இருவரையும் சிறையில் அடைத்தனர்.

வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞனை தனது தங்கை காதலித்ததால் இரண்டு நாட்களுக்கு முன்பு காதலனையும் ரக்க்ஷாபந்தன் அன்று தங்கையையும் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.