Home இந்தியா தொழிலாளர் சட்டத்திற்கு எதிர்ப்பு – கேரளாவில் முழு வேலைநிறுத்தம்!

தொழிலாளர் சட்டத்திற்கு எதிர்ப்பு – கேரளாவில் முழு வேலைநிறுத்தம்!

மத்திய அரசின் தொழிலாளர் வரைமுறை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கேரள மாநிலத்தில், இன்று நள்ளிரவு முதல் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது என்று தொழிலாளர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

மத்திய அரசு தொழிலாளர் வரைமுறை சட்டத்தை அமல்படுத்த தீர்மானித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள மாநிலத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் நாளை வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் கேரளாவில் உள்ள பெரும்பாலான தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் கடைகள் அனைத்தும் மூடப்படும் என்றும், பேருந்துகள் உட்பட எந்தவொரு வாகனங்களும் இயக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.