Home திரையுலகம் திடீர் சந்திப்பு..30 நிமிடங்களாக பேசியது என்ன..?

திடீர் சந்திப்பு..30 நிமிடங்களாக பேசியது என்ன..?

சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் ரஜினியை சந்தித்து பேசினார் நைனார் நாகேந்திரன்.

திரைவுலகில் 50 வருடங்களை நிறைவு செய்துள்ள ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்ததாக நைனார் நாகேந்திரன் தகவல் தெரிவித்துருக்கிறார்.

தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 50 வருடத்திற்கு மேலாக உச்ச நட்சத்திரமாக இருக்கக்கூடிய நடிகர் ரஜினிகாந்த்.

இதற்காக ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர்களும் முக்கிய பிரபலங்களும் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் சமீபத்தில் பாஜக லிருந்து பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர் .

அதே போன்று சமீபத்தில் அவர் பிரதமர் மோடியையும் சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார் .

இந்நிலையில் தமிழகத்தினுடைய மாநில பாஜகவினுடைய தலைவரான நைனர் நாகேந்திரன் சென்னை போயஸ் கார்டனில் இருக்கக்கூடிய ரஜினிகாந்தின் இல்லத்தில் சந்தித்து சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக பேசி இருப்பதாக அந்த காணொளிகள் வெளியாகி இருக்கின்றன

சென்னையில் நடிகர் ரஜினிகாந்துடன் தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் சந்தித்து பல விஷயங்களை அந்த சந்திப்பில் பேசியதாகவும் அரசியல் சார்ந்தும் அதே போன்று தனிப்பட்ட விஷயங்கள் சார்ந்தும் நட்பு விவகாரம் குறித்தும் பல நிமிடங்கள் வந்து அவர்கள் பேசி உரையாடியதாக அந்த தகவல்கள் வெளியாகிறது

கூலி திரைப்படத்தின் வெற்றிக்கும் ரஜினிக்கு தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் அந்த வாழ்த்தையும் தெரிவித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு அரசியல் பிரபலங்களும் கூலி திரைப்படம் வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் நைனார் நாகேந்திரன் அவர்களும் ரஜினிகாந்தை சந்தித்து 50 வருட திரைவாழ்க்கைக்கும் வாழ்த்து தெரிவித்தும் பாராட்டி இருக்கின்றார்