சென்னை கோயம்பேடு பட்டாபிராம் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிக்கு முதற்கட்டமாக தமிழக அரசின் சார்பில் 2442 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
சென்னையில் தற்போது இயக்கப்படும் மெட்ரோ ரயில் தளத்துடன் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
அந்த அடிப்படையில் கோயம்பேடு முதல் பட்டாபிரம் வெளிவட்ட சாலை வரையில் மெட்ரோ வழித்தடத்தை நீட்டிப்பதற்கு திட்டமிடப்பட்டு இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசிடம் சமர்ப்பித்துக்கப்பட்டிருக்கிறது.
மொத்தம் 21.76 கிலோமீட்டர் தூரத்திற்கு கொண்டிருந்த வழித்தடத்தில 19 ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது மொத்தம் 9700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டமானது மேற்கொள்ளப்பட இருக்கிறது .
இந்த நிலையில் இதற்கான முதற்கட்ட இந்த நிலம் கையகப்படுத்துவது மற்றும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான பூர்வாங்க பணிகளுக்காக மொத்தம் 244 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது.
பல்வேறு பணிகளுக்காக இந்த நில 2442 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக தொழில்நூட்ப ஆய்வு மேற்கொள்ளுதல் நிலங்கள் கையப்படுத்துதல் சுற்றுசூழ மற்றும் ஆராய்ச்சி பணிக்காக இந்த நிதி ஒதுக்கப்படுவதாக இந்த அரசாங்கங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கு.







