Home இந்தியா IT ஊழியர்களே உஷார்!  தேவை குறைந்து வரும் 5 முக்கிய ஐடி பணிகள்:

IT ஊழியர்களே உஷார்!  தேவை குறைந்து வரும் 5 முக்கிய ஐடி பணிகள்:

நீங்க ஐடி துறையில் வேலை பார்கறீங்களா? இல்ல கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிட்டு ஒரு நல்ல வேலைக்காக ஆவலோடு காத்திருக்கீங்களா? அப்போ இந்த செய்தி உங்க வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான சில நிமிடங்களாக இருக்க போகுது.

IT-ன்னா வாழ்க்கை செட்டில் அப்படின்னு நாம ஒரு கணக்குல இருக்கோம். ஆனா உண்மை அது கிடையாது.

தொழில்நுட்பம் மின்னல் வேகத்துல மாறிக்கிட்டே இருக்கு. இன்னைக்கு உச்சத்தில் இருக்கிற ஒரு வேலை நாளைக்கு இல்லாமலே போகலாம்.

அமெரிக்காவில் இருக்க ஒரு பெரிய வேலைவாய்ப்பு இணையத்தளமான dice.com சமீபத்துல ஒரு அதிர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டுருக்காங்க .

அந்த அறிக்கையின்படி நாம சில வருஷமா பெருசா பேசிக்கிட்டு இருந்த சில டெக் வேலைகளோட தேவை குறைஞ்சு சம்பளம் பாதியா சரிஞ்சு அந்த வேலைகளே மெல்ல மெல்ல வழக்கொழிந்து போவதா சொல்றாங்க .

அதே சமயம் சில புதிய வேலைகளுக்கு பயங்கரமான போட்டியும் லட்சக்கணக்கான சம்பளமும் கொடுக்கப்படுது.

இது அமெரிக்காவில் தானே நடக்க போகுது. நம்மளுக்கு என்ன அப்படின்னு நினைக்காதீங்க. அங்க ஆரம்பிக்கிற அலை அடுத்த சில மாதங்கள்ல இந்தியாவையும் வந்து தாக்கும்.

அதனால உங்க வேலை பாதுகாப்பானதா? இல்ல ஆபத்தான கட்டத்துல இருக்கா? வாங்க விரிவா பார்க்கலாம். முதல்ல எந்த வேலைகளுக்கு ஆபத்துன்னு பார்ப்போம்.

தேவை குறைந்து, சம்பளமும் சரிந்து வரும் ஐந்து முக்கியமான ஐடி பணிகள் என்னென்ன? பட்டியல்ல ஐந்தாவது இடத்தில இருப்பது, சேல்ஸ் போர்ஸ் டெவலப்பர். ஆச்சரியமா இருக்குல்ல கொஞ்ச காலத்துக்கு முன்னாடி வர சேல்ஸ் போர்ஸ் படிச்சா வாழ்க்கை பிரகாசமா இருக்கும் அப்படின்னு சொல்லப்பட்டுச்சு.

ஆனா இப்போ அவங்களுடைய சம்பளம் சுமார் 8% வரை சரிஞ்சிருக்கு. இதற்கு காரணம் என்னன்னா இந்த துறைக்கு வரவங்க எண்ணிக்கை அதிகமாக்கிட்டதுனால நிறுவனங்கள் சம்பளத்தை குறைக்க ஆரம்பிச்சிட்டாங்க.

நான்காவது இடத்துல இருக்கிறது யாருன்னா ஹெல்த் டெஸ்க் டெக்னிஷியன். நம்ம கம்ப்யூட்டர்ல ஏதாவது சின்ன பிரச்சனைனா உடனே ஒரு நம்பருக்கு போன் பண்ணி உதவி கே்போம் இல்லையா? அந்த வேலைதான் இது.

இப்போ இந்த வேலைக்கு செயற்கை நுண்ணறிவு அதாவது ஏஐ மூலமா இயங்குற சாட் பாட்ஸ் வந்துருச்சு. உங்களுடைய பிரச்சனையை டைப் செஞ்சாலே போதும். அதுவே தீர்வு சொல்லிடும். இதனால இந்த வேலைக்கான தேவை 10% குறைஞ்சிருக்கு.

இதை தொடர்ந்து மூன்றாவது இடத்துல யாரு இருக்காங்கன்னா கம்ப்யூட்டர் ஆபரேட்டர். பெரிய பெரிய சர்வல பராமரிக்கிற வேலை ஆனா இப்போ எல்லாமே கிளவுட் தொழில்நுட்பத்துக்கு மாறிடுச்சு.

Amazமon google மாதிரியான நிறுவனங்களே எல்லாத்தையும் பார்த்துக்கறதுனால இந்த வேலைக்கு ஆட்கள் தேவைப்படமா போயிட்டு இருக்கு.சம்பளம் 12% அளவுக்கு விழச்சியை சந்திச்சிருக்கு.

இரண்டாவது இடத்துல யார் இருக்காங்கன்னா டெக்னிக்கல் சப்போர்ட் இன்ஜினியர். இதுவும் ஹெல்ப் டெஸ்க் வேலை மாதிரிதான். ஆனா இன்னும் கொஞ்சம் ஆழமான தொழில்நுட்ப பிரச்சனைகளை சரி செய்வது. சின்ன சின்ன பிரச்சனைகளை ஏஐ பார்த்து கொள்வதனால இந்த வேலைக்கான தேவையோ 13% அளவுக்கு சரிஞ்சிருக்கு.

இப்போ முதல் இடத்துல மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு வேலை. யாருன்னா வெப் டிசைனர். ஒரு காலத்துல ஒரு வெப்சைட் உருவாக்குறதுன்னா அது ஒரு பெரிய கலை.

ஆனா இப்போ ஏஐ கருவிகளை வச்சு தொழில்நுட்பம் தெரியாதவங்க கூட சில நிமிடங்கள்ல ஒரு அழகான வெப்சைட்ட உருவாக்கிட முடியும்.

சாதாரண வெப்சைட் டிசைன்களுக்கு இப்போ ஆட்களை தேவையில்லை. இதனாலேயே அவங்களுடைய சம்பளம், கிட்டத்தட்ட 19% அளவுக்கு வீழ்ச்சியை சந்திச்சிருக்கு.