Home தமிழகம் “வானில் பறக்க வேண்டிய நேரம்… ஓடுபாதையில் சிக்கிய விமானம்”

“வானில் பறக்க வேண்டிய நேரம்… ஓடுபாதையில் சிக்கிய விமானம்”

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓடு பாதையில் விமானம் நிறுத்தப்பட்டிருக்கிறது. விமானத்தை சரி செய்யும் பணியில் வல்லுனர்கள் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, துபாய், சார்ஜா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.

திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் அந்த விமானங்களை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இன்று அதிகாலை ஒரு 4:45 மணிக்கு திருச்சியிலிருந்து சார்ஜாவிற்கு 180 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட இருந்தது.

ஓடு பாதையில் புறப்பட்டு டேக் ஆப் ஆவதற்கு முன்பாக விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக விமானத்தை இயக்கிய விமானி விமானத்தை டேக் ஆப் செய்யாமல் மீண்டும் ஓடு பாதையிலே விமானத்தை நிறுத்திவிட்டார்.

சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொழில்நுட்ப கோளாறு சரி செய்யும் பணியில் வல்லுனர்கள் ஈடுபட்டுட்டு இருக்காங்க. 180க்கும் மேற்பட்ட பயணிகள் விமானத்திற்குள்ளே அமர வைக்கப்பட்டிருக்காங்க.

இன்னும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அதை சரி செய்யும் பணி ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதி அடைந்து உள்ளனர். அதே நேரத்தில் விமானம் புறப்படுவதற்கு முன்பாகவே இந்த தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதனால் எந்தவித ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் விமானம் தற்பொழுது ஓடு பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வல்லுனர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுட்டு வருகிறார்கள்.