தமிழ் மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நவ்யா நாயர். இவர் சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதை இரண்டு முறையும் கலைமாமணி விருதையும் வென்றிருக்கிறார்.
விக்டோரியாவின் மலையாளி சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஓணம் கொண்டாட்டங்களில் பங்கேற்க நடிகை நவ்யா நாயர் அண்மையில் ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.
அப்போது ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் விமான நிலையத்தில் அவர் இறங்கியபோது தலையில் மல்லிகைப்பூ அணிந்திருந்ததாக அவருக்கு ஒரு லட்சத்து 14,000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய நவ்யா நாயர் தனது தந்தை தனக்கு இரண்டு மல்லிகைப்பூ சரங்களை வாங்கி கொடுத்ததாகவும் அதில் ஒரு பகுதியை சிங்கப்பூர் செல்லும் வரை தலையில் சூடி இருந்ததாகவும் மற்ற 15 cm நீளமுள்ள சரத்தை மெல்போர்னுக்கு பயணம் செய்ய பையில் வைத்திருந்ததாகவும் கூறியுள்ளார்.
ஆனால் இது அந்நாட்டின் சட்டத்திற்கு எதிரானது என்பது தனக்கு தெரியாது அறியாமை ஒருபோதும் விதிமீறலுக்கு சாக்கு போக்கு அல்ல எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் பயோசெக்யூரிட்டி விதிமுறைகளை மீறியதற்காக அவருக்கு ஒரு லட்சத்து 14,000 ரூபாய் அபராதத்தை விமான நிலை அதிகாரிகள் விதித்தனர்.
இதனை செலுத்த 28 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த மோசமான சம்பவம் அவரது ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை பாதிக்கவில்லை.
தனது இன்ஸ்டா பக்கத்தில் தலையில் மல்லிகை பூ சூடியிருந்த ரீல்ஸ் வீடியோவை நடிகை நவ்யா நாயர் பகிர்ந்து ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.








