இசை உலகில் தமிழுக்கும் தமிழருக்கும் மட்டுமல்லாது தமிழ்நாட்டுக்கே தனி பெருமையை தேடி தந்தவர் இசைஞானி அவர்கள் இமாலய சாதனையும் எளிமையும் ஒருங்கமைந்த மாமனிதரும் ஆவார்.
சாஸ்திரிய சங்கீதம் மேற்கத்தி செவ்வியல் இசை மக்கள் இசை வெற்றிற்கிடையே நிலவிய வேறுபாடுகளை தனது இசையின் வழியே ஒன்றாக்கிய இசைமேதை அவர்.
குறிப்பாக திரையிசையை கடந்து முழுமையான மேற்கத்திய செவ்வியல் இசையில் அவர் நிகழ்த்தி இருக்கும் சிம்பொனி என்ற சாதனை ஒவ்வொரு இசை கலைஞருக்கும் இசைத்துறையில் புதுமை செய்ய ஊக்கமளிக்கக்கூடிய சாதனையாக இருக்கிறது.
அவரை பார்த்து வளர்ந்த கலைஞன் என்பதில் எப்போதும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி உண்டு. இந்த கொண்டாட்டத்தில் பங்கெடுத்துக் கொள்வதில் உங்களைப் போலவே நானும் பெருமை கொள்கிறேன்.
இசைஞானி இளையராஜா அவர்கள் பொன்விழா ஆண்டை தமிழ்நாட்டு அரசே ஒருங்கமைத்து கொண்டாடுவதை இளையராஜா அவர்களுக்கு மட்டுமான விழாவாக அல்லாமல் ஒட்டுமொத்த இசை கலைஞர்களுக்கான அங்கீகாரமாக பார்க்கிறேன். எல்லா புகழும் இறைவனுக்கே.







