Home திரையுலகம் “சூப்பர் ஸ்டார் – உலகநாயகன் இணைவு?

“சூப்பர் ஸ்டார் – உலகநாயகன் இணைவு?

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

“கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை இருக்கிறது. அதற்கான சரியான கதை மற்றும் கதாபாத்திரம் உருவானால் கண்டிப்பாக நடிப்பேன். தற்போது ராஜ்கமல் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் இணைந்து படம் எடுக்கத் திட்டமிட்டுள்ளன. ஆனால் இதுவரை இயக்குனர் மற்றும் கதை, கதாபாத்திரம் குறித்து முடிவு எடுக்கப்படவில்லை” என்று ரஜினி கூறினார்.

இதன் மூலம் ரஜினி-கமல் இணைவு மீண்டும் திரை உலகில் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.