Home திரையுலகம் “இசை உலக தம்பதிகளின் பிரிவு: தீர்ப்பு தேதி அறிவிப்பு”

“இசை உலக தம்பதிகளின் பிரிவு: தீர்ப்பு தேதி அறிவிப்பு”

இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் பாடகி சைந்தவி விவாகரத்து கோரிய வழக்கில் அக்டோபர் 30 ஆம் தேதி குடும்பநல நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது. விவாகரத்து கோரிய வழக்கில் ஜிவி பிரகாஷ் பாடகி சைந்தவி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார்கள். இந்த நிலையில் அக்டோபர் 30 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

விவாகரத்துக்கு கோரிய வழக்கில் குடும்பநல நீதிமன்றம் ஆறு மாத கால அவகாசம் வழங்கியிருந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள் இருவரும், இந்த நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் மணவாழ்க்கையில் இருந்து பிரிவதாக கடந்த ஆண்டு அறிவித்தனர் இந்த நிலையில் ஆறு மாத கால அவகாசத்திற்கு பிறகு இன்றைய தினம் ஆஜரானார்கள். இந்த நிலையில் அக்டோபர் 30 ஆம் தேதி இந்த விவகாரத்தில் தீர்ப்பளிக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரபல இசையமைப்பாளர் , நடிகருமான ஜிவி. பிரகாஷ் கடந்த 2013 ஆம் ஆண்டு தன்னுடைய பள்ளி தோழியும்,சினிமா பின்னணி பாடகியுமான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜி.வி. பிரகாஷ் சைந்தவி தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார்கள்.

கடந்த 12 ஆண்டு கால திருமண உறவில் அவர்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர் இந்த நிலையில் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் 2025 ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி பரஸ்பரம் விவாகரத்து வழங்க கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார்கள் அந்த மனுவில் இருவரும் மனம் ஒத்து பிரிவதாக தெரிவித்திருந்தார்கள்.

இந்த மனுவை கோப்புக்கு எடுத்துக்கொண்ட சென்னை குடும்பநல நீதிமன்றம் சட்டப்படி ஆறு மாத கால அவகாசம் வழங்கி விசாரணையை தள்ளி வைத்திருந்தார் ஆறு மாத கால அவகாசம் முடிவடைந்த நிலையில் இன்றைக்கு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் நேரில் ஆஜராகி இருந்தார்கள்.

அப்போது இருவரும் பிரிந்து வாழ விரும்புவதாக நீதிபதி முன் தெரிவித்தார்கள். மேலும் குழந்தையை வந்து சைந்தவி கவனித்துக் கொள்வதில் எந்த ஒருஆட்சேபனையும் இல்லை என்று ஜிவி பிரகாஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு என்பது செப்டம்பர் 30ஆம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருக்கிறார்.