பறக்கும் சவப்பெட்டி என்று அழைக்கப்படும் மிக் 21 ரக போர் விமானம் இந்திய விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளது. விமானப்படை தலைமை தளபதி அமர் சிங் கடைசியாக மிக் 21 போர் விமானத்தை இயக்கி சாகசத்தில் ஈடுபட்டார்.
இந்திய விமானப்படை வரலாற்றில் ஒரு முக்கியமான அத்தியாயம் இன்றோடு முடிவுக்கு வந்திருக்கிறது. பிளையிங் காப்பிங் அதாவது பறக்கும் சவப்பெட்டி என்று அழைக்கப்படுகின்ற மிக் 21 ரக போர் விமானம் இந்திய விமானப்படையில் இருந்து இன்றுடன் அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றிருக்கிறது.
சுமார் 62 ஆண்டு காலம் இந்திய விமானப்படையில் சேவையாற்றிய பிறகு இன்றுடன் முறைப்படி அது அதற்கு பிரியாவிடை அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான பிரியாவிடை வழங்கும் நிகழ்வு சண்டிகரில் இருக்கக்கூடிய விமானப்படை தளத்தில் நடைபெற்றது.
ஏன் சண்டிகர் இதற்கு தேர்வு செய்யப்பட்டது என்றால், சண்டிகர் விமானப்படை தளத்தில் தான் முதன்முறையாக மிக் 21 ரகப் போர் விமானம் இந்திய விமானப்படையில் கடந்த 1963 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. எனவேதான் அதற்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்ச்சியும் சண்டிகர் விமானப்படை தளத்திலிருந்து நடைபெற்றிருக்கிறது.
எங்கிருந்து மிக் போர் விமானம் தன்னுடைய பயணத்தை துவங்கியதோ அங்கிருந்தே தன்னுடைய பயணத்தையும் அது நிறைவு செய்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமானப்படை தளபதி அமர் பிரீத் சிங் முப்படைகளின் தலைமை தளபதி அணில் சவகான் மற்றும் குரூப் கேப்டனும் இந்திய விண்வெளி வீரருமான சுபான்ஷ சுக்லா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் .
விமானப்படையினுடைய ஊழியர்கள் அணிவகுப்பு மரியாதையை வழங்கியதோடு கண்கவர் சாகச நிகழ்ச்சியிலும் ஈடுபட்டார்கள். இந்த விமானத்தை கடைசியாக தற்போது விமானப்படை தளபதியாக இருக்கின்ற அமர் சிங் இந்த விமானத்தை இயக்கி அதற்கு ஓய்வு கொடுத்திருக்கிறார்.
இந்த விமானத்தை முதன்முறையாக இயக்கியவர் அப்போது விமானப்படையினுடைய முன்னாள் தளபதியாக இருந்த தில்பாக் சிங் கடைசியாக இயக்கியவர் தற்போது விமானப்படை தளபதியாக இருக்கின்ற அமர் பிரீத் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பொறுப்பை இனி தேஜாஸ் போர் விமானங்கள் ஏற்றுக்கொள்ள இருக்கின்றன. இதுவரை மிக் போர் விமானம் நடத்தி வந்த அந்த பொறுப்பை எல்லாம் இனி எல்.சி.ஏ தேஜாஸ் அதாவது லைட் காம்பக்ட் ஏர்கிராப்ட் என்று அழைக்கப்படுகின்ற தேஜாஸ் போர் விமானங்கள் ஏற்றுக்கொள்ள இருக்கின்றது.
இன்றைய தினம் மிக் போர் விமானங்களோடு சேர்த்து தேஜாஸ் போர் விமானங்களும் வானில் சாகசம் நடத்தியது. தன்னுடைய பொறுப்பை இனி தேஜாஸ் பார்த்துக் கொள்ளும் என்பது போல, அந்த பொறுப்பை மிக் போர் விமானத்திடமிருந்து தேஜாஸ் ஏற்றுக் கொண்டது.
தேஜாஸ் போர்விமானங்களை இந்தியாவை சேர்ந்த பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.








