காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் 2025 26 ஆம் கல்வி ஆண்டிற்கான முதல் பருவம் காலாண்டு தேர்வுகள் இன்றுடன் நிறைவடைகிறது. நாளையிலிருந்து ஒன்பது நாட்கள் காலாண்டு விடுமுறை என்பது தமிழக அரசு சார்பில் பள்ளி கல்வித்துறையின் மூலமாக அறிவிக்கப்பட்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
நாளையிலிருந்து அக்டோபர் ஐந்தாம் தேதி வரைக்கும் காலாண்டு விடுமுறைகள் ஒன்பது நாட்கள் விடுபட்டிருக்கக்கூடிய நிலையில் தனியார் பள்ளிகள் அந்த விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குனர்கள் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.
நீதிமன்றத்தினுடைய தீர்ப்பை சுட்டிக்காட்டி தற்போது இந்த அறிவுரை வழங்கி இருப்பதாகவும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. விடுமுறை நாட்களில் மாணவர்களை பள்ளிக்கு கட்டாயமாக வர வைப்பது என்பது கூடாது என நீதிமன்றம் கூறி இருப்பதாகவும் அதன் அடிப்படையில் சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்களை கட்டாயப்படுத்த கூடாது என்கின்ற ஒரு அறிவிப்பை வழங்கி இருக்கிறது.
27 ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 5ஆம் தேதி வரைக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. இடையில் ஆயுத பூஜை உள்ளிட்ட அந்த விடுமுறைகளும் அதே அந்த காலண்டு விடுமுறையிலே வந்துவிடும்.
அக்டோபர் ஐந்தாம் தேதிக்கு பிறகு அதாவது ஆறாம் தேதி அடுத்த பருவத்திற்கான அந்த கால வகுப்புகள் தொடங்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.








