Home இந்தியா “பாஸ்போர்ட்டுக்கு டிஜிட்டல் அப்டேட் – இந்தியாவில் இ-பாஸ்போர்ட் சேவை தொடக்கம்!”

“பாஸ்போர்ட்டுக்கு டிஜிட்டல் அப்டேட் – இந்தியாவில் இ-பாஸ்போர்ட் சேவை தொடக்கம்!”

வெளிநாடு செல்ல திட்டமிடுகிறீர்களா? அப்போ இந்த சூப்பர் குட் நியூஸ் உங்களுக்காகத்தான். இந்திய அரசு நமது பாஸ்போர்ட்டில் ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. அதன் பெயர்தான் இ-பஸ்போர்ட். பாஸ்போர்ட் சேவா 2.0 என்ற திட்டத்தின் கீழ் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அப்படி என்ன ஸ்பெஷல் இபஸ்போர்ட்டில் இதை எப்படி வாங்குவது? எவ்வளவு கட்டணம்? வாருங்கள் எல்லா விவரங்களையும் தெளிவாக பார்க்கலாம். முதலில் இபாஸ்போர்ட் என்றால் என்ன? சுருக்கமாக சொன்னால் இது நமது வழக்கமான பாஸ்போர்ட் புத்தகத்தின் ஒரு ஸ்மார்ட் வெர்ஷன்.

உங்கள் பாஸ்போர்ட் புத்தகத்திற்குள் ஒரு சிறிய எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்டிருக்கும். இந்த சிப்பில் உங்கள் பெயர், பிறந்த தேதி, புகைப்படம் போன்ற விவரங்களோடு உங்கள் கைரேகை போன்ற பயோமெட்ரிக் தகவல்களும், டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டிருக்கும்.

இதை எப்படி அடையாளம் காண்பது? ரொம்ப சிம்பிள். உங்கள் புதிய இ- பாஸ்போர்ட்டின் முன்பக்கம் அட்டையில் ஒரு சிறிய தங்க நிறத்தில் கேமரா போன்ற சின்னம் அச்சிடப்பட்டிருக்கும். அதை பார்த்தாலே இது இ- பாஸ்போர்ட் என்று தெரிந்து கொள்ளலாம். இதன் பயன்கள் என்ன?

இதன் மிகப்பெரிய பயன் பாதுகாப்பு. இந்த சிப் இருப்பதனால் உங்கள் பாஸ்போர்ட்டை யாரும் போலியாக உருவாக்க முடியாது. உங்கள் தகவல்களை திருடவும் முடியாது. இரண்டாவது பெரிய நன்மை, வேகம். இனி விமான நிலையங்களில் இமிகிரேஷன் கவுண்டர்களில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதில்லை. இந்த இ- பாஸ்போர்ட் இயந்திரத்தில் ஸ்கேன் செய்வதன் மூலம் உங்கள் விவரங்கள் உடனடியாக சரிபார்க்கப்பட்டு உங்கள் பயணம் மிகவும் வேகமாகவும் எளிதாகவும் அமையும்.

சரி இதற்கு கட்டணம் எவ்வளவு? பலரும் நினைப்பது போல இ பாஸ்போர்ட்டுக்கு தனியாக அதிக கட்டணம் எதுவும் இல்லை. சாதாரண பாஸ்போர்ட் வாங்குவதற்கு கட்டணம் தான் இதற்கும். சாதாரண முறையில் விண்ணப்பித்தால் 36 பக்கங்கள் கொண்ட புத்தகத்திற்கு ரூபாய் 1500 , 60 பக்கங்கள் கொண்ட புத்தகத்திற்கு ரூபாய் 2000. தக்கல் முறையில் விண்ணப்பித்தால் கூடுதல் கட்டணம் செலுத்தப்பட வேண்டிய இருக்கும்.

சரி இந்த இ -பாஸ்போர்ட்டுக்கு எப்படி விண்ணப்பிப்பது? புதிய
இ- பஸ்போர்ட் வாங்குவதற்கு வழிமுறைகள் பழைய பாஸ்போர்ட் வாங்குவது போலத்தான் எந்த மாற்றமும் இல்லை. பாஸ்போர்ட் india.ment.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள். அங்கே ஒரு புதிய கணக்கை உருவாக்கி அப்ளை ஹேர் பிரஷ் பாஸ்போர்ட் ஆப் பாஸ்போர்ட் என்பதை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் நிரப்பவும்.

அடுத்து ஆன்லைனிலேயே பாஸ்போர்ட் கட்டணத்தை செலுத்த வேண்டும். அடுத்து உங்களுக்கு அருகில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் ஒரு அப்பாயின்ட்மெண்ட்டை புக் செய்யுங்கள். அடுத்து நீங்கள் புக் செய்த தேதியில் உங்கள் அசல் ஆவணங்களுடன் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு செல்லுங்கள். அங்கே உங்கள் புகைப்படம் கைரேகை எடுக்கப்பட்டு ஆவணங்கள் சரிபார்க்கப்படும். அவ்வளவுதான் உங்கள் விண்ணப்ப செயல்முறை முடிந்தது.

சரிபார்ப்புக்கு பிறகு உங்கள் புதிய பாதுகாப்பான இ-பாஸ்போர்ட் உங்கள் வீட்டிற்கே வந்துவிடும். தற்போது இந்த சேவை ஒரு சில பாஸ்போர்ட் அலுவலகங்களில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். எனவே இ- பாஸ்போர்ட் வாங்குபவர்கள் இந்த நவீன தொழில்நுட்பத்தின் பலன்களை அனுபவிக்க தயாராகுங்கள்.