Home திரையுலகம் சினிமாவில் 50 ஆண்டு! ரஜினிக்கு சர்வதேச வாழ்நாள் சாதனை விருது!!

சினிமாவில் 50 ஆண்டு! ரஜினிக்கு சர்வதேச வாழ்நாள் சாதனை விருது!!

கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்நாள் சாதனையாளர் விருதால் கௌரவிக்கப்பட்டார். கோவாவில் 56வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. இந்த விழாவில் சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 50 ஆண்டுகளாக சினிமாவில் செய்துள்ள சாதனைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

விருதைப் பெற்றுக்கொண்ட ரஜினிகாந்த், தன்னை கௌரவித்த மத்திய அரசு மற்றும் கோவா அரசுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், “சினிமாவையும் நடிப்பையும் என்றும் நேசிக்கிறேன்; பிறவி எத்தனை எடுத்தாலும் நடிகராகவே பிறக்க விரும்புகிறேன்” என்றும் கூறினார்.