Home இந்தியா “கோல்டுக்கு முந்திய வெள்ளி – முதலீட்டாளர்களுக்கு லாப வாய்ப்பு”

“கோல்டுக்கு முந்திய வெள்ளி – முதலீட்டாளர்களுக்கு லாப வாய்ப்பு”

இன்றைய வெள்ளி விலை ரொம்ப அதிகமாக உயர்ந்துள்ளது. இதற்கான காரணங்களைப் பார்க்கும் போது, சில முக்கிய அம்சங்கள் தெளிவாகின்றன:

முதலாவது, சர்வதேச அளவில் வெள்ளிக்கு அதிகமான தேவை ஏற்பட்டுள்ளது. வெள்ளியை முதலீட்டாளர்கள் ஒரு லாபகரமான பொருளாக பார்க்கின்றனர்.

பெரிய முதலீட்டாளர்கள் வெள்ளியில் முதலீடு செய்தால், பெரிய அளவில் லாபம் ஈட்ட முடியும் என்பது இதற்கான முக்கிய காரணமாகும்.

இரண்டாவது, வெள்ளியின் பயன்பாடுகள் பலவகைப்படுத்தப்பட்டுள்ளன. இன்று தொழில்துறையில் வெள்ளி முக்கிய மூலப்பொருளாக உள்ளது.

முன்பு வெள்ளியின் பயன்படுத்தும் அளவு சுமார் 80% இருந்தது என்றால், இன்று அது 85% ஆக அதிகரித்து, லித்தியம் பேட்டரி, விமான உற்பத்தி, ஏரோநாட்டிக்ஸ், கனெக்டர்கள், சோலார் பேனல்கள் போன்ற துறைகளில் பெரிய அளவில் தேவையாகி வருகிறது.

மூன்றாவது, வெள்ளியின் நகைகள் பிரபலமாகி வருகின்றன. இதன் காரணமாக மக்கள், முதலீட்டாளர்கள் வெள்ளியில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் வெள்ளியின் விலை மேலும் உயர்ந்து வருகிறது.

எனவே, இப்போதைய சூழலில் முதலீட்டாளர்களுக்கு ஒரு ஆலோசனை: வெள்ளியில் முதலீடு நீண்டகால முதலீட்டாகவே செய்யவேண்டும்.

உடனடி லாபம் காணும் நோக்கில் முதலீடு செய்வது தவிர்க்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் ஒரு வருடம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை நீண்டகால முதலீடு செய்தால், நல்ல லாபத்தை பெற முடியும்.

தினசரி விலை ஏற்ற இறக்கங்களை பார்த்து பதட்டப்படாமல், நீண்டகால நோக்குடன் முதலீடு செய்வதே வெள்ளியின் மீது முதலீட்டுக்கு சிறந்த நடைமுறை ஆகும்.