Home தமிழகம் ”இந்த இரண்டு மாதங்களில் மேல்மருவத்தூர் செல்லும் பயணிகளுக்கு வரும் சலுகை”

”இந்த இரண்டு மாதங்களில் மேல்மருவத்தூர் செல்லும் பயணிகளுக்கு வரும் சலுகை”

மேல்மருவத்தூரில் 57 ரயில்கள் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் மற்றும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மேல்மருவத்தூரில் 57 விரைவு ரயில்கள் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டியன் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ், அந்தியோதியா எக்ஸ்பிரஸ், எழும்பூர்–கொள்ளம் உள்ளிட்ட 57 ரயில்கள், ஜனவரி 1ஆம் தேதி முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.