Home திரையுலகம் “ஹோட்டல் உரிமையாளரை ஏமாற்றியதாக சீரியல் நடிகை ராணி மீது வழக்கு”

“ஹோட்டல் உரிமையாளரை ஏமாற்றியதாக சீரியல் நடிகை ராணி மீது வழக்கு”

கரூரில் ஹோட்டல் உரிமையாளரிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் பணம், BMW கார் மற்றும் ஐந்து சவரன் நகைகளை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சீரியல் நடிகை ராணி, அவரது கணவர் உள்ளிட்ட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த தினேஷ் ராஜ். கரூரில் உணவகம் நடத்தி வரும் இவர், தனக்கு பணத் தேவை இருப்பதாக கூறி, சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த பாலாஜி என்பவரிடம் உதவி கேட்டுள்ளார்.

உதவுவதாக கூறிய பாலாஜி, தினேஷ் ராஜிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் பணம், BMW கார் மற்றும் ஐந்து சவரன் நகைகளை அடமானமாகப் பெற்றுள்ளார்.

அந்த பணம் மற்றும் நகைகளை சீரியல் நடிகையான தனது மனைவி ராணியிடம் காட்டி உதவி பெறுவதாகவும், பின்னர் அனைத்தையும் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் கூறி பாலாஜி தினேஷ் ராஜை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தினேஷ் ராஜ் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சீரியல் நடிகை ராணி, அவரது கணவர் பாலாஜி உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.