Home திரையுலகம் “விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! ‘ஜனநாயகன்’ சென்சார் பிரச்சனைக்கு முடிவு”

“விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! ‘ஜனநாயகன்’ சென்சார் பிரச்சனைக்கு முடிவு”

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜனநாயகன் திரைப்படத்திற்கான சென்சார் சான்றிதழ் வழங்குவது தொடர்பான தீர்ப்பு வெளியாகியுள்ளது. ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆஷா அவர்களின் தீர்ப்பு தற்போது முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது. ஒரு நபர் அளித்த புகாரின் அடிப்படையில், ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வெளியாகி, ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு எப்போது வெளியாகும் என்று ரசிகர்களும் படக்குழுவினரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில், பல்வேறு திரைப் பிரபலங்களும் நடிகர் விஜய் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டிருந்தனர். நல்லதே நடக்கும் என பலரும் ஆதரவு பதிவுகளை பகிர்ந்திருந்த சூழலில், தற்போது நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது.

மறு ஆய்வு குழுவுக்கு படத்தை அனுப்ப வேண்டும் என்ற முடிவு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல எனக் குறிப்பிட்டு, சென்சார் சான்றிதழ் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பு படத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. நீதிபதி முன்வைத்த கருத்துகளின் அடிப்படையில், நடிகர் விஜய் ரசிகர்களும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்களும் கொண்டாடக்கூடிய தீர்ப்பாக இது அமைந்துள்ளது.

இந்த தீர்ப்பின்படி, விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்று வழங்க சென்சார் போர்டுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உடனடியாக சிபிஎப்சி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இன்று மதியத்திற்குள் அல்லது மாலைக்குள் சான்றிதழ் வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அப்படி இல்லாவிட்டால், நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவின்படி உடனடியாக சென்சார் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் உத்தரவாகும்.

மேலும், மறு ஆய்வு குழுவுக்கு படத்தை அனுப்பிய உத்தரவை ரத்து செய்து, அந்த முடிவு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மறு ஆய்வுக்கு படத்தை அனுப்ப வேண்டும் என்ற முடிவை பட தயாரிப்பு நிறுவனம் தங்களது வாதத்தின் மூலம் கடுமையாக எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில், மறு ஆய்வுக்கு அனுப்புவதற்கு முன்பு எடுக்கப்பட்ட முடிவின்படி, ஜனநாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ (U/A) சான்றிதழ் வழங்கப்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய தினமே திரையரங்குகளில் திரைப்படம் வெளியிடுவது தொழில்நுட்ப காரணங்களால் சாத்தியமில்லை என்பதால், மாற்று வெளியீட்டு தேதி தொடர்பான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியிடும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மறு ஆய்வுக்கு படத்தை அனுப்பிய உத்தரவை ரத்து செய்து, தற்போதைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.