விஜய், பூஜா ஹெக்டே, மவிதா பைஜு, பாபிதியோல், பிரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த “ஜனநாயகன்” படம் வெளியாக உள்ளது.
தவெக தலைவர் விஜய்ின் கடைசி படமாக இருக்கும் ஜனநாயகன், பொங்கல் விருந்தாக ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வருகிறது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகிய இப்படத்திற்கு அணிருத்து இசை அமைத்துள்ளார். பெரும் பொருட்செலவில் கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த நிலையில், படத்திற்கு சென்சாரில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தணிக்கை அதிகாரிகள் சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக, சண்டை காட்சிகளில் அதிக இரத்தம் தெரியும் காட்சிகளை குறைக்க சொல்லியுள்ளனர். இதற்காக படக்குழு இவற்றை சரி செய்து மீண்டும் தணிக்கைக்கு அனுப்ப இருக்கிறது.
இதற்கிடையே, படத்தின் டிரெய்லர் புத்தாண்டு விருந்தாக, டிசம்பர் 31ஆம் தேதி இரவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து படக்குழுவால் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியிடப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதே நிகழ்ச்சியில் விஜய் வெளிப்படையாகச் சொல்லியதாவது, “ஜனநாயகன்” படத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகுகிறேன்” என்று அறிவித்துள்ளார்.








