Home திரையுலகம் “புனிதத்தைக் காரணம் காட்டி தடை… சன்னி லியோன் நிகழ்ச்சி ரத்து”

“புனிதத்தைக் காரணம் காட்டி தடை… சன்னி லியோன் நிகழ்ச்சி ரத்து”

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், நடிகை சன்னி லியோன் கலந்து கொள்ள இருந்த புத்தாண்டு நிகழ்ச்சி கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், பாலிவுட் நடிகையும் மாடலுமான சன்னி லியோன் கலந்து கொள்ளும் புத்தாண்டு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அந்த நிகழ்ச்சி ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெறவிருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மதுரா ஒரு புனித நகரம் என்பதால், இதுபோன்ற நிகழ்ச்சிகளை அங்கு அனுமதிக்க முடியாது எனக் கூறி, மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து எதிர்ப்பு மேலும் வலுத்த நிலையில், சன்னி லியோனின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்தனர்.