Home தமிழகம் “ரேஷன் கடையில் பொங்கல் பரிசு எளிதாக பெற டோக்கன் முறை”

“ரேஷன் கடையில் பொங்கல் பரிசு எளிதாக பெற டோக்கன் முறை”

பொங்கல் பண்டிகையை அனைவரும் சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என்பதற்காக, பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்தார்.

இந்த பொங்கல் பரிசை எளிதாகவும் சிரமமின்றியும் மக்களுக்கு வழங்குவதற்காக, டோக்கன் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளன. சென்னையில் வீடு வீடாகச் சென்று ஊழியர்கள், பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன்களை வழங்கி வருகின்றனர்.

அந்த டோக்கனில், எந்த தேதி மற்றும் எந்த நேரத்தில் பரிசு பெற வேண்டும் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. டோக்கனில் குறிப்பிடப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசை பெற்றுக் கொள்ளலாம்.