தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் ஜனநாயகன். எச். வினோத் இயக்கிய இப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். பிரம்மாண்டத்தின் உச்சமாக இசை வெளியீடு நடந்து முடிந்த நிலையில் சமீபத்தில் டிரெய்லர் வெளியானது. இதைப் பற்றி பிரபலங்கள் தரப்பிலிருந்து இதுவரை பெரிதாக பேசவில்லை.
இந்த நிலையில் நடிகர்களில் முதலில் ரவிமோகன், ஜனநாயகன் படத்தையும், விஜயையும் வாழ்த்தி பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
“தளபதி வெற்றி பெற்றார். விஜய் அண்ணா, என்னை பொறுத்தவரை, நீங்கள் ஏற்கனவே அனைத்திலும் வெற்றி பெற்றுவிட்டீர்கள். டிரெய்லர் சூப்பராக இருக்கிறது. இந்த படம் என்னையும் சேர்த்து பலரது இதயங்களை வெல்லும் என்பதில் முழு நம்பிக்கை இருக்கிறது. எப்போதும் உங்கள் ரசிகனாகவும், சகோதரனாகவும் நான் இருப்பேன்.







