Home தொழில்நுட்பம் ஐபோன் யூசர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்! Apple வெளியிட்ட அறிவிப்பு!

ஐபோன் யூசர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்! Apple வெளியிட்ட அறிவிப்பு!

டெக்னாலஜி உலகில் ஒரு மிகப்பெரிய பூகம்பம். இதுவரை போட்டியாளர்களாக இருந்த ஆப்பிளும் கூகுளும் இப்போது கை கோர்த்துக்கொண்டுள்ளன. ஆப்பிளின் வாய்ஸ் அசிஸ்டன்ட்டான சிரி, இனிமேல் கூகுளின் ஜெமினி AI தொழில்நுட்பத்தில் இயங்கப் போகிறது.

இந்த தகவலை இரு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இது iPhone பயனர்களுக்கு ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸ் தான். ஏற்கனவே Samsung போன்களில் Galaxy AI கலக்கிக் கொண்டிருக்கிறது.

இப்போது ஆப்பிள் என்ன செய்திருக்கிறது என்றால், தன்னுடைய 200 கோடிக்கும் அதிகமான டிவைஸ்களில் ஜெமினி AI-யை கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதனால் சிரி இன்னும் புத்திசாலித்தனமாகவும், அதிகமாக பர்சனலைஸ் செய்யப்பட்ட பதில்களையும் வழங்கும்.

சாதாரணமாக டைமர் செட் செய்வது மட்டுமல்லாமல், புகைப்படங்களை பார்த்து பதில் சொல்லும், டாக்குமெண்ட்கள் ரெடி செய்வது போன்ற பல வேலைகளையும் இனிமேல் ஜெமினி AI பார்த்துக்கொள்ளும்.

இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆரம்பத்தில் ஆப்பிள் ChatGPT நிறுவனத்துடன் தான் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால் இப்போது கூகுள்தான் சிறந்த தேர்வு என்று முடிவு செய்து, அவர்களுடன் பல வருட ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது. இது OpenAI நிறுவனத்திற்கு ஒரு பெரிய அடி.

இந்த ஒப்பந்தத்தின் காரணமாக கூகுளின் சந்தை மதிப்பு நான்கு டிரில்லியன் டாலரை தாண்டியுள்ளது.

ஆப்பிள் கூறுவதாவது, தனியுரிமைக்கு (Privacy) அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள். பயனர்களின் டேட்டா பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதியளித்துள்ளனர்.

இந்த ஆண்டு வரவிருக்கும் iPhone அப்டேட்டில், நீங்கள் ஒரு புதிய சிரியை பார்க்கப் போகிறீர்கள். கூகுள் சர்ச் இன்ஜின் ஏற்கனவே ஆப்பிளில் இருக்கிறது. இப்போது AI-யும் சேர்ந்துவிட்டது. இந்த மெகா கூட்டணி, டெக் உலகத்தையே ஆளப் போகிறது.