தபால் நிலையத்தின் MIS (Monthly Income Scheme) திட்டத்தில், ஒருமுறை பணத்தை முதலீடு செய்வதன் மூலம், ஒவ்வொரு மாதமும் வட்டி தொகையை மட்டும் வருமானமாக பெறலாம்.
மத்திய அரசு வழங்கும் இந்த திட்டத்தில், உங்கள் முதலீட்டிற்கு 100% பாதுகாப்பு உள்ளது. இந்த திட்டத்தின் வட்டி விகிதம் தற்போது ஆண்டுக்கு 7.40% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
கூட்டு கணக்கு தொடங்கினால், அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இதில் மூன்று நபர்கள் வரை சேரலாம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
இந்த திட்டத்தில் கணக்கு தொடங்க 18 வயது பூர்த்தி செய்த எவரும் தகுதியுடையவர்கள்.
இந்த திட்டத்தில் மாதம் ₹5,500 வருமானம் பெற, அதிகபட்ச முதலீடு தொகையை செலுத்த வேண்டும்.
நீங்கள் தனிநபர் கணக்கை தொடங்கி அதில் 9 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 7.40% வட்டி விகிதத்தின் அடிப்படையில், மாதம் ₹5,550 வட்டியாக கிடைக்கும்.
அதேபோல், கூட்டு கணக்கில் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் ₹9,750 வரை வருமானம் பெற முடியும்.
இந்த திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் பணத்தை எடுத்தால், சில அபராத கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
அதாவது, 1 ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் பணத்தை எடுத்தால், உங்கள் அசல் தொகையில் 2% கழிக்கப்படும்.
3 ஆண்டிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் பணத்தை எடுத்தால், உங்கள் அசல் தொகையில் 1% கழிக்கப்படும்.
கணக்கு தொடங்கி ஒரு ஆண்டு முடிவதற்கு முன் பணத்தை எடுக்க முடியாது.
உங்கள் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று, விண்ணப்பப் படிவம் மற்றும் KYC ஆவணங்கள் (ஆதார், பேன், புகைப்படம்) சமர்ப்பித்து, குறைந்தபட்சம் ₹1,000 முதலீட்டில் இந்த கணக்கை தொடங்கலாம்.
இந்த திட்டம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகி விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.








