Home தமிழகம் ”திடீர் உடல்நலக் குறைவு: அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் – நேரில் சென்ற முதல்வர்”!

”திடீர் உடல்நலக் குறைவு: அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் – நேரில் சென்ற முதல்வர்”!

உடல்நலக் குறைவு காரணமாக அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது, அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அமைச்சர் துரைமுருகனை மருத்துவர்கள் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். உடல்நலக் குறைவு காரணமாக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவலை அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மருத்துவமனைக்கு நேரில் சென்று துரைமுருகனை சந்தித்து நலம் விசாரித்தார்.