கடந்த சில வருடங்களுக்கு முன்பு, தமிழக மக்கள் ஒன்றாகக் கூடி ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்திய போது அதன் மூலம் பிரபலமாகி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் எண்ட்ரி கொடுத்தவர்தான் ஜூலி.
அந்த நிகழ்ச்சிக்கு பிறகு, தொகுப்பாளினியாக கலக்கி வந்தார். தொடர்ந்து சில படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அவை எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை.
கடந்த ஆண்டு இறுதியில் ஜூலிக்கும் முகமது இக்ரீம் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், ஜூலிக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. அவர்களுக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.








