தமிழகத்தில் சிக்கன் குனியா நோய் அதிகரிப்பதை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதார அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், தென்காசி, தேனி, கடலூர், காஞ்சிபுரம் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் சிக்கன் குனியா நோய் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சிக்கன் குனியா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதார அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், வாரம்தோறும் கூட்டம் நடத்தி நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த அறிக்கைகளை பெற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.








