Home உலகம் “USA Frozen! பனிப்புயல் காரணமாக மின் பாதிப்பு, உணவு கடைகள் காலி”

“USA Frozen! பனிப்புயல் காரணமாக மின் பாதிப்பு, உணவு கடைகள் காலி”

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் வீச தொடங்கிய நிலையில், 16 மாநிலங்களில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பல மாநிலங்களில் நிலவி வந்த பனிப்பொழிவு தற்போது தீவிரமடைந்து, பனிப்புயலாக மாறியுள்ளது.

வீடுகள், சாலைகள் பனி போர்த்தி உள்ளதால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. -40° வரை எலும்பை ஊடுருவும் குளிர் நிலவி வருகிறது.

பனிப்புயல் மேலும் தீவிரமடையும் என்று வானிலை மையம் அறிவிப்பதால், அதற்கேற்ப பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவாலயங்களில் வழிபாடு ஆன்லைன் முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பலர் உணவு பொருட்களை தற்போதே அதிக அளவில் வாங்கி வைக்க தொடங்கிவிட்டனர்.

இதனால் பல கடைகளில் பொருட்கள் தீர்ந்துவிட்டன. பனிப்புயல் காரணமாக மின் வினியோக பாதையும் பாதிக்கப்படும் என்பதால், மின்சார வினியோகம் முற்றிலுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பனிப்புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தற்போதே நிவாரண முகாமிகள் திறக்கப்பட்டுள்ளன. பேரிடர்களில் சிக்குபவர்களை மீட்க மீட்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.