தொகுப்பாளிணியாக பயணத்தைத் தொடங்கி பின்னர் நடிப்புக்கு வந்த பிரபலங்களில் ஒருவர்தான் மகாலட்சுமி. பல சீரியல்களில் நடித்தவர், தயாரிப்பாளர் ரவீந்திரனை மறுமணம் செய்து எல்லோருக்கும் ஷாக் கொடுத்தார்.
இந்த நிலையில் நடிகை மகாலட்சுமி புதிய தொழிலைத் தொடங்கியுள்ளார். அதாவது “கிராண்ட்மாஸ் மேஜிக்” என்ற பெயரில் ஊறுகாய் வியாபாரம் ஆரம்பித்துள்ளார்.
அந்த வீடியோக்களை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்து வாழ்த்து கூறிய ரசிகர்கள், அவரது ஊறுகாயை பெற ஆர்டர் செய்து வருகின்றனர்.








