Home உலகம் அதிர்த்தது மியான்மர்! கொல்கத்தா வரை உணரப்பட்ட நடுக்கத்தால் மக்கள் பீதி!

அதிர்த்தது மியான்மர்! கொல்கத்தா வரை உணரப்பட்ட நடுக்கத்தால் மக்கள் பீதி!

மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் மியான்மருடன் சேர்த்து வங்கதேசம் மற்றும் இந்தியாவின் கொல்கத்தா பகுதிகளிலும் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கம் மியான்மரின் ஆக்கியாப் (சிட்வே) நகருக்கு கிழக்கே சுமார் 70 மைல் தொலைவில் ஏற்பட்டதாக சர்வதேச நிலநடுக்க ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 71 மணி நேரத்திற்குள் மியான்மரில் ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிலநடுக்கத்தால் அச்சமடைந்த பொதுமக்கள் பாதுகாப்புக்காக வீடுகளை விட்டு வெளியேறி வெளிப்புறங்களில் தஞ்சம் புகுந்தனர். இருப்பினும், நிலநடுக்கத்தின் மையப்புள்ளி மற்றும் ஆழம் குறித்த துல்லியமான தகவல்களை USGS போன்ற அமைப்புகள் தொடர்ந்து ஆய்வு செய்து அவ்வப்போது புதுப்பித்து வருகின்றன