வீட்டு லோன், கார் லோன் அல்லது பர்சனல் லோன் என ஏதாவது ஒரு EMIயை இந்த மாதம் உங்களால் கட்ட முடியவில்லையா? “அய்யோ, CIBIL ஸ்கோர் போயிடுமே… இனிமேல் லோன் கிடைக்காதே”ன்னு பயப்படுறீங்களா? கவலைப்பட வேண்டாம்.
ஒரு EMI மிஸ் ஆகுவது மட்டும் உங்கள் கிரெடிட் வரலாற்றை முழுக்கவே பாதிக்காது. ஆனால், நீங்கள் செய்ய வேண்டிய ஒரு முக்கிய விஷயம் இருக்கு.
நம்மில் பலருக்கும் சம்பளம் தாமதமாக வருவதாலோ, திடீர் மருத்துவ செலவுகளாலோ, EMI கட்ட முடியாத சூழ்நிலை உருவாகலாம்.
நீங்கள் EMI கட்ட வேண்டிய தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் அந்த தொகையை செலுத்தினால், உங்கள் CIBIL ஸ்கோருக்கு பெரிய பாதிப்பு இருக்காது.
ஆனால் 30 நாட்களை தாண்டினால் தான் பிரச்சனை ஆரம்பிக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பலரும் செய்யும் பெரிய தவறு என்னன்னா, பயந்துகிட்டு வங்கியிலிருந்து வரும் போன் கால்களை எடுக்காம இருப்பதுதான். இது தான் நீங்கள் செய்யும் மிகப்பெரிய தவறு. சைலண்டா இருக்காதீங்க.
நேரடியாக உங்கள் பேங்க் மேனேஜரை தொடர்பு கொள்ளுங்கள். “சார், இந்த மாதம் இப்படித்தான் நிலைமை. அடுத்த மாதம் கண்டிப்பா கட்டிடுவேன்”னு தெளிவாக விளக்கி சொல்லுங்கள். உங்கள் பழைய ட்ராக் ரெக்கார்ட் நல்லா இருந்தால், வங்கியே உங்களுக்கு கால அவகாசம் கொடுக்க வாய்ப்பு உண்டு.
முக்கியமாக, லேட் பேமெண்ட் சார்ஜ் மற்றும் வட்டிக்கு வட்டி அபராதம் சேர விடாதீங்க. இது அடுத்த மாதம் உங்கள்மீது பெரிய சுமையை ஏற்படுத்தும்.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் நிலுவை தொகையை செலுத்த முயற்சி செய்யுங்கள். குறிப்பாக, முதன்முறையாக லோன் வாங்கியவர்கள் EMI மிஸ் ஆகுவதை ஒரு வார்னிங் சிக்னல் ஆக மட்டும் புரிஞ்சுக்கிட்டா போதும்.
மொத்தத்துல, வங்கியிடம் இருந்து ஒளிஞ்சு ஓடாம, நேரடியாக பேசித் தீர்வு காணுங்கள். உங்கள் CIBIL மதிப்பையும், நிதி கௌரவத்தையும் காப்பாத்திக்கொள்ளுங்கள்.








