Home திரையுலகம் “ரசிகர்களின் அன்பே வெற்றி – தமிழகம் முழுவதும் விஜயம் அறிவித்த நடிகர் பாலா!”

“ரசிகர்களின் அன்பே வெற்றி – தமிழகம் முழுவதும் விஜயம் அறிவித்த நடிகர் பாலா!”

நடிகர் பாலா நடித்துள்ள காந்தி கண்ணாடி திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. தொடக்கத்தில் மிகக் குறைந்த திரையரங்குகளிலேயே திரையிடப்பட்டாலும், மக்கள் அளித்த பெரும் வரவேற்பால் தற்போது திரையிடும் இடங்கள் அதிகரித்து வருகின்றன.

இதுகுறித்து நடிகர் பாலா மகிழ்ச்சியுடன் கூறியதாவது: “இந்த படம் ஆரம்பத்தில் அதிக திரையரங்குகள் கிடைக்கவில்லை. ஆனாலும், மக்கள் கொடுத்த ஆதரவு, யூடியூப்–இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோக்கள் எல்லாம் பார்த்து, பல இடங்களில் தியேட்டர்கள் சேர்க்கப்பட்டன.

இன்னும் சில ஊர்களில் படம் வெளியாகவில்லை. அந்த ஊர்களை நீங்கள் கமெண்டில் சொன்னால், அங்கும் படம் வெளியாகும் வகையில் ஏற்பாடு செய்வோம்.

எந்த பெரிய பின்னணியும் இல்லாமல், மக்களை நம்பி எடுக்கப்பட்ட இந்த படத்துக்கு நீங்கள் அளித்த அன்பும் ஆதரவும் எனக்கு மிகப்பெரும் உற்சாகமாக உள்ளது. விரைவில் தமிழகம் முழுவதும் தியேட்டர் விஜயம் செய்து நேரில் வந்து நன்றி சொல்லப் போகிறேன். என் மனம் கனிந்த நன்றிகள்.

திரையரங்கு உரிமையாளர்களும் குடும்பம் முழுவதும் ரசித்து பார்க்கும் வகையில் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.