சிங்கம், வேங்கை, யானை, ரத்தினம் போன்ற படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர் ஹரி ராமநாத சுவாமி கோவிலுக்கு வருகை தந்து 22 புனித தீர்த்தங்களை நீராடி ராமநாத சுவாமி பர்வதவர்த்தினை அம்மனை தரிசனம் செய்தார்.
இயக்குனர் ஹரி 2002 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவின் இயக்குனராக அறிமுகமாகி தமிழ், சாமி, கோவில், அருள், தாமிரபரணி, சிங்கம், வேங்கை, யானை, ரத்தினம் போன்ற 15க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இவரது படங்கள் அதிரடி ஆக்சன் மற்றும் குடும்ப சென்டிமென்ட் படமாக இருப்பதால் தமிழக மக்கள் அனைவருக்கும் பிடித்த இயக்குனராவும் உள்ளார்.
இவர் ராமேஸ்வரம் வருகையை தந்து அக்னிதீத்த கடலில் நீராடி ராமநாதசாமி கோவிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களை நீராடிவிட்டு ராமநாதசுவாமி பர்வதவர்த்தினை அம்மனை தரிசனம் செய்து சென்றார்.
இதில் ராமநாதசாமி கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். புதிய படத்தின் வேலை நடைபெற்று வருவதால் சுவாமி தரிசனம் செய்ய வந்ததாகவும் விரைவில் அது குறித்தான அப்டேட் வெளியாகும் என தெரிவித்தார்.








