Home திரையுலகம் “புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் – மலரும் நினைவுகளுடன் பிரேமலதா விஜயகாந்த் ”

“புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் – மலரும் நினைவுகளுடன் பிரேமலதா விஜயகாந்த் ”

கேப்டன் பிரபாகரன் திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருக்கும் நிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள திரையரங்கில் விஜய பிரபாகரன் எல். கே சுதேஷ் உடன் திரைப்படம் பார்த்த பிரேமலதாபடம் பார்த்து தேம்பி தேம்பி அழுதார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். இவர் 1979 ஆம் ஆண்டு வெளியான அகழ்விளக்கு திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பின்னர் அவர் நடித்த அனைத்து படங்களும் வெற்றி படங்களாக அமைந்தன அந்த வகையில் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான படம் கேப்டன் பிரபாகரன்.

இது விஜயகாந்தின் 100வது படமாகும். இப்படத்தின் மூலம் தான் விஜயகாந்திற்கு கேப்டன் என்ற அடைமொழி கிடைத்தது.இந்த படத்தில் மன்சூர் அலிகான் ரூபிணி லிவிங்ஸ்டன் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்

. மறைந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திரை பயணத்தின் மையில்கல் திரைப்படமான கேப்டன் பிரபாகரன் மீண்டும் திரைக்கு புதுப்பொலிவுடன் இன்று வெளிவந்தது.

கேப்டன் பிரபாகரன் படம் வெளியாகி 34 ஆண்டுகள் ஆகின்ற நிலையில் இன்று தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்கில் இந்த படம் பிரமாதமாக ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் முதல் காட்சி கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள திரையுலகில் பிரேமலதா விஜயகாந்த் அவர்களது மகன் விஜய பிரபாகரன் மற்றும் எல். விகே சதீஷ் ஆகியோரை ரசிகர்கள் பேண்ட்வாத்தியங்கள் முழக்க திரையரங்குக்குள் அவர்கள் அழைத்து வரப்பட்ட நிலையில் இந்த படம் துவங்கும் முதல் கைதட்டி ரசித்து பார்த்தார்கள்.

முதல் முறையாக விஜயகாந்த் சண்டை காட்சியில் தோன்றியபோது பிரேமலதா விஜயகாந்த் கதரி கதரி அழ துவங்கினார்.

அப்போது அவரை விஜய் பிரபாகரன் மற்றும் சுதீஷ் ஆகியோர் அமைதிப்படுத்தி தொண்டர்களும் அழ வேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.

34 ஆண்டுகளுக்கு பிறகு போக தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் வடிவில் வெளியாகியுள்ள கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.