Home இந்தியா “BE, BSc, BA, BTech படிக்குறவங்களுக்கு சூப்பர் நியூஸ் – Central Govt Scholarship வந்துருச்சு!”

“BE, BSc, BA, BTech படிக்குறவங்களுக்கு சூப்பர் நியூஸ் – Central Govt Scholarship வந்துருச்சு!”

கல்லூரி படிப்புகளுக்கு என்னென்ன உதவித்தொகை எல்லாம் கொடுக்குறாங்க அப்படின்றத பத்தி நம்ம ஒரு சீரியஸா பார்த்துட்டு இருக்கோம் இன்னைக்கு அந்த மாதிரி பார்க்க போற ஸ்காலர்ஷிப் (Scholarship) என்ன அப்படின்னா சென்ட்ரல் ஸ்கீம் ஆஃப் ஸ்காலர்ஷிப் பார் காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் அண்ட் யுனிவர்சிட்டி ஸ்டுடென்ட்ஸ் (Central Scheme of Scholarship for College Students and University Students) இந்த திட்டத்தை பொறுத்தவரைக்கும் .

என்ன உதவித்தொகை கொடுக்குறாங்க அப்படின்னா கலை அறிவியல் படிப்புகள் தொழில்நுட்ப படிப்புகள் அதே மாதிரி பொறியியல் படிப்புகள் இவங்க எல்லாருக்குமே இந்த உதவித்தொகை பொருந்தும் .

கலை அறிவியல் படிப்பா இருக்குற பட்சத்துல மூன்று ஆண்டுகளுக்கு அவர்களுக்கான உதவித்தொகை உண்டு ஒரு ஆண்டுக்கு 12,000 என்பதுதான் இந்த திட்டத்தோட உதவித்தொகை இருக்கு.

அதே மாதிரி தொழில்நுட்ப படிப்புகளாக இருக்கிற பட்சத்துல நான்காவது ஐந்தாவது ஆண்டுகள்ல அவர்களுக்கு ₹20,000 மற்றபடி முதல் மூன்று ஆண்டுகளுக்கு ₹12,000 அதே மாதிரி பிஇ பிடெக்(BE BTech) மாதிரியான பொறியியல் படிப்புகளாக இருக்கிற பட்சத்துல அதே மாதிரிதான் முதல் மூன்று ஆண்டுகளுக்கு தலா ₹12,000 நான்காவது ஆண்டுக்கு மட்டும் ₹20,000 என்பதுதான் இந்த உதவித்தொகை திட்டமா இருக்கு சரி இதுக்கு யாரெல்லாம் தகுதி அப்படின்னு பார்ப்போம்

12 ஆம் வகுப்புல முதல் டாப் 20% குள்ள இருக்கணும் அவங்க அவங்க படிச்ச அந்த போர்டுல அதாவது இப்ப ஸ்டேட் போர்டா இருக்கு அப்படின்னா அதுல ஒரு லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருக்காங்க அப்படின்னா அதுல டாப் 20% குள்ள மதிப்பெண் எடுத்திருக்கணும். அவங்க இந்த ஸ்காலர்ஷிப்புக்கு தகுதி

அதே மாதிரி குடும்ப வருமானம் 4.5 லட்சம் ரூபாய்க்கு உள்ளாக இருக்கணும் என்பதும் இதோட முக்கியமான ஒரு கண்டிஷனா வச்சிருக்காங்க .

அதே மாதிரி இது டிஸ்டன்ஸ் எஜுகேஷன்க்கோ டிப்ளமா(Diploma in Distance Education) படிப்புகளுக்கோ பொருந்தாது என்பதும் இதோட கண்டிஷனா இருக்கு.

அதே மாதிரி பிளஸ்2 முடித்த பிறகு ஓராண்டு பிரேக் எடுத்துட்டு உயர்கல்வியில் சேர்றவங்களுக்கும் இந்த உதவித்தொகை பொருந்தாது என்பது இதோட ஒரு முக்கியமான விதிமுறையாக வகுக்கப்பட்டிருக்கு.

அடுத்ததாக இதுக்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன அப்படின்னு பார்த்தோம்னா பிளஸ்2 தேர்வோட மதிப்பெண் சான்றிதல் அவசியம்.

அதே மாதிரி குடும்ப வருமான சான்றுதல் அவசியம் சாதி சான்றுதல் அவசியம் ஏன்னா இந்த உதவித்தொகையை பொறுத்தவரைக்கும் இதற்குள்ள இட ஒதுக்கீட்டு நடைமுறை பின்பற்றப்படுது.

மதிப்பின் அடிப்படையிலான உதவித்தொகை தான் என்றாலும் இதுல இட ஒதுக்கீட்டு நடைமுறை முறையும் பின்பற்றுறாங்க அப்படின்றதுனால இதுக்கு சாதி சான்றிதல் அவசியம்.

ஒருவேளை மாற்றுத் திறனாளிகளாக இருந்தாங்க அப்படின்னா அவர்களுக்கான சான்றிதல் என்பதும் அவசியம் ஏன்னா ஹரிசாண்டல் ரிசர்வேஷன்(Horizontal Reservation) என்பது மாற்றுத் திறநாளிகளுக்கும் பின்பற்றப்படுது முக்கியமாக ஆதார் அட்டை அந்த வங்கிக் கணக்கோட ஏன்னா இது நேரடியாக வங்கி கணக்குலதான் அந்த உதவித்தொகை வரவு வைக்கப

இணைக்கப்பட்ட ஆதார் அட்டை ஆதார் எண் அவசியம் அந்த ஆதார் அட்டையும் பிளஸ்2 மதிப்பெண் சான்றுதல்ல இருக்கிற பெயரும் ஒன்றாக இருக்க வேண்டியதும் அவசியம் அப்படி இல்லாத மாணவர்கள் அதை சரி செஞ்சுக்க வேண்டியதும்
அவசியம்.

முக்கியமா இந்த உதவித்தொகைக்கான எல்லா அறிவிப்புகளும் அதே மாதிரி நீங்க அப்ளை பண்ணிட்டீங்க அப்படின்னா அதோட ஸ்டேட்டஸ் என்ன அப்படின்றத தெரிஞ்சுக்கிறதும்.

இந்த உதவித்தொகைக்கான அறிவிப்பு எல்லாமே நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்ட்டல் (National Scholarship Portal) அதாவது www.solarships.gov.in இந்த இணையதளத்தில் தான் வெளியாகும்